ola electric s1 pro price hiked – ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.20,000 உயர்ந்தது

ஒலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Pro மற்றும் S1 என இரு மாடல்களின் விலை முறையே ரூ.15,000 என உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக FAME-II மானியம் ஜூன் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய அரசு FAME-II மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.15,000 ஆக இருந்தது.

Ola S1 Pro Electric scooter

ஓலா S1 3kWh வேரியண்ட் விலை ரூ.15,000 அதிகரித்து இப்பொழுது ₹.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) உள்ளது. S1 Pro வேரியண்டின் விலை இப்போது ரூ.1.40 லட்சம் ஆகும், முந்தைய மாடலை விட இப்பொழுது இந்த இ-ஸ்கூட்டரின் விலை ரூ.15,000 உயர்த்தப்பட்டுள்ளது.

S1 புரோ பேட்டரி ஸ்கூட்டரில் மிகவும் சக்திவாய்ந்த 4 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்ச வேகம் 116Km/h மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 181km ரேஞ்சு வழங்கும் என IDC மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 6.30 மணி நேரம் தேவைப்படும்.

Ola S1 Pro Specs
Battery Capacity 4kWh
Motor Type PMSM
Power (kW) 5.5 kW
Torque (Nm) 58 Nm
Top Speed 116 km/hr
Range (km) 181km (Eco)
Modes Eco, Normal, Sports, Hyper
Acceleration (0-60Km) 4.5 Secs

ஓலா S1 புரோ தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,52,599

ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 2kWh, 3kWh, மற்றும் 4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் 85Km/hr ஆக உள்ளது. 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும். எஸ்1 ஏர் விலையில் மாற்றமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.