சிங்கப்பூர், சிங்கப்பூரில் உள்ள ஹிந்து கோவிலில் பணிபுரிந்த தலைமை அர்ச்சகருக்கு, கோவில் நகைகளை அடகு வைத்து ஏமாற்றிய வழக்கில், ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றியவர், கந்தசாமி சேனாபதி. கடந்த 2013ல் பணியில் சேர்ந்த இவர், கோவிலின் நகைகளையும் பராமரித்து வந்தார்.
கடந்த 2020ல் கொரோனா வைரஸ் பரவல் காலத்தின்போது, கோவில் நகைகளை கணக்கெடுப்பு செய்தபோது, கந்தசாமி அவற்றை அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2016 முதல் 2020 வரை, கோவில் நகைகளில் சிலவற்றை அடகு வைத்துள்ளார்.
பிறகு, வேறு சில நகைகளை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தில், முந்தைய நகைகளை மீட்டு, கோவிலில் வைத்துள்ளார்.
இவ்வாறு மாறி மாறி, 12.40 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நகைகளை அடகு வைத்துள்ளார். தற்போது முழு நகைகளும் மீட்கப்பட்டுஉள்ளன.
இருப்பினும் பண மோசடி செய்தது, ஏமாற்றியது உள்ளிட்ட பிரிவுகளில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், அவருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement