இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Superstar Rajinikanth: ரஜினியின் கெரியர் பற்றி ரசிகர்கள் கவலையில் இருந்த நேரத்தில் அவரின் அண்ணன் சத்ய நாராயண ராவ் கூறிய விஷயம் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ரஜினிநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். மேலும் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.பிச்சைக்காரன் 2பிரம்மாண்டமாக நடைபெற்ற பிச்சைக்காரன்-2 வெற்றி விழாரிடையர்தலைவர் 171 படத்துடன் ரஜினி நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் என தகவல் வெளியானது. ஆனால் ஓய்வு பற்றி ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும். அவர் மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என அவரின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்தார். இந்நிலையில் தான் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார்.
படங்கள்திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் சத்யநாராயண ராவ். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ரஜினியின் படங்கள் மற்றும் அரசியலுக்கு வருவாரா, எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பார் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சத்ய நாராயண ராவ் கூறியதாவது, ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாகவிருக்கின்றன. அப்புறம் அடுத்து 3 நல்ல படங்கள் வருது என்றார்.
அரசியல்Yashika: யாஷிகாவும், அஜித் மச்சானும் எங்கு, எப்படி சந்தித்து காதலித்தார்கள்?சத்ய நாராயண ராவ் மேலும் கூறியதாவது, முருகன் அருளால் ரஜினிகாந்த் ஆரோக்கியமாக, சந்தோஷமாக, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. இனி வந்து பிரயோஜனம் இல்லை. அவர் யாருக்கும் ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. அவ்வளவு தான் என தெரிவித்தார்.
ரசிகர்கள்ரஜினி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவாரோ என ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள். இந்நிலையில் தான் அவர் மேலும் 3 படங்களில் நடிக்கிறார் என அண்ணன் சத்ய நாராயண ராவ் தெரிவித்திருப்பது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தலைவர் ரிடையர் ஆகவில்லை. நம் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
கமல்Kamal Haasan: நண்பர் ரஜினியிடம் பேசிவிட்டேன்: குட் நியூஸ் சொன்ன கமல் ஹாசன்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். அந்த படம் தொடர்பாக நானும், ரஜினியும் பேசிவிட்டோம் என கமல் கூறியிருக்கிறார். ரஜினி படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறாராம். அந்த படம் குறித்து ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ரஜினியை வைத்து கமல் ஹாசன் தயாரிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
கோரிக்கைலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் கமல் ஹாசன் கவுரவத் தோற்றத்தில் கண்டிப்பாக வர வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். ரஜினியையும், கமலையும் சேர்த்து பெரிய திரையில் பார்த்து பல காலமாகிவிட்டது. அதனால் தலைவரும், ஆண்டவரும் எங்களுக்காக ஒன்றாக சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். அவர்களின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.