சென்னை: Samantha (சமந்தா) சமந்தா பகிர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கே டஃப் கொடுப்பார் போல என சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்துவருகின்றனர்.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
உச்சம் சென்ற சமந்தா: திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதால் அது கொடுக்கும் மன அழுத்தம் காரணமாக இனி சமந்தாவால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாது என பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் அவர்களது ஆரூடத்தை அடித்து நொறுக்கும்படி சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது.
சமந்தாவுக்கு வந்த நோய்: இப்படி அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைய; தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.
நடிப்பில் கவனம்: நோயிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா மீண்டும் முழு வேகத்தில் படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் அண்மையில் ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. பத்து கோடி ரூபாய்கூட அந்தப் படம் வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக சமந்தாவின் கரியரில் சாகுந்தலம் பெரும் தோல்வி படமாக சேர்ந்திருக்கிறது. அதே சமயம் கேன்ஸ் திரைப்பட விழாவில் அப்படத்துக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இருப்பினும் வசூல் ரீதியாக அடி வாங்கியதால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர்.
சிட்டாடல்: இதற்கிடையே ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன் இந்திய வெர்ஷனில் ப்ரியங்கா சோப்ரா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதனை ராஜ்& டிகே இயக்குகின்றனர். அதேபோல், சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் குஷி படமும் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.சிட்டாடலும், குஷியும் சமந்தாவுக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமந்தாவின் ஃபோட்டோ: இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் கறுப்பும், பச்சையும் கலந்தமாதிரி இருக்கும் அவுட் ஃபிட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்தப் புகைப்படத்தில் செம ஸ்டைலாக கூலர்ஸையும் அணிந்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள், ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கே சமந்தா டஃப் கொடுப்பார் போல என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.