Southern Railway notice of high speed train delay | அதிவிரைவு ரயில் தாமதம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதுச்சேரி – டில்லி அதிவிரைவு ரயில் 6:40 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 4:30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இருந்து வாரந்தோறும் புதன் கிழமை டில்லிக்கு அதிவிரைவு ரயில் (எண்: 22403) புறப்பட்டு செல்கிறது.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் இன்று (31ம் தேதி) காலை 9:50 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி – டில்லி அதிவிரைவு ரயில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக மாலை 4:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.