Thalaivar 171: உண்மை சம்பவத்தை கையிலெடுக்கும் லோகேஷ்..தரமாக தயாராகும் தலைவர் 171 ..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க தற்போது இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த லிஸ்டலில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியும் இணைந்துள்ளார். தன் 171 ஆவது படத்தை லோகேஷ் தான் இயக்கவேண்டும் என ஆசைப்பட்ட ரஜினி தன் ஆசையை லோகேஷிடம் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் படத்தை இயக்கம் வாய்ப்பு தானாக அமைகின்றதே என்ற சந்தோஷத்தில் லோகேஷும் தலைவர் 171 படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். இருப்பினும் இவர்கள் ஏற்கனவே இணைவதாக இருந்து சில பல காரணங்களால் அக்கூட்டணி அமையாமல் போனது. அதன் பிறகு தற்போது லோகேஷ் மற்றும் ரஜினி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Dhanush: D50 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கப்போவது இவங்க தானா? மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி ..!

இந்நிலையில் தற்போது லியோ படத்தை இயக்கிவரும் லோகேஷ் இப்படத்தை முடித்துவிட்டு ரஜினியின் பட வேலைகளில் இறங்குவார் என தெரிகின்றது. மறுபக்கம் ரஜினி லால் சலாம் மற்றும் ஞானவேலின் படத்தை முடித்துவிட்டு 171 படத்திற்காக தயாராவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

தற்போது தலைவர் 171 படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றன.. சன் பிக்சர்ஸ் தான் தலைவர் 171 படத்தை தயாரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமலே தலைவர் 171 படத்தை தயாரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது.

இது ஒருபக்கம் இருக்க தற்போது தலைவர் 171 படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது போலியாக நடத்தப்படும் என்கவுன்டர்களை பற்றிய படம் தான் தலைவர் 171 என்றும், இப்படத்தை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு லோகேஷ் உருவாக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. தற்போது லோகேஷ் இயங்கிக்கொண்டிருக்கும் லியோ படத்திலும் அர்ஜுன் வில்லனாக நடிக்கின்றார். இதைத்தொடர்ந்து தலைவர் 171 படத்திலும் அர்ஜுன் வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ரஜினி மற்றும் லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படம் இந்தியளவில் பேசப்படும் படமாக கண்டிப்பாக இருக்கும் என்பதே அனைவரது கருத்தாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.