கொச்சி, அரிசிகொம்பன் யானையை தமிழகத்தில் இருந்து மீட்டு கேரளாவுக்குள் அழைத்து வந்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு உத்தரவிடக் கோரும் வழக்கை கேரளா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரள வனப்பகுதியில் இருந்த அரிசி கொம்பன் யானை, அங்குள்ள கடைகள் மற்றும் ரேஷன் கடைகளுக்குள் புகுந்து அரிசியை சாப்பிட்டு வந்தது.
சமீபத்தில் இந்த யானை, தமிழக எல்லைக்குள் நுழைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் அந்த யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இதைஅடுத்து அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரும், அரசியல்வாதியுமான சாபு ஜேக்கப், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரிசிகொம்பன் யானையை தமிழகத்தில் இருந்து மீட்டு, கேரள வனப்பகுதிக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
‘இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என, மனுவை உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement