World Wrestling Organization condemns Indian Wrestling Federation | இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரிஜ் பூஷன் விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச முயன்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக யு.டபிள்யு.டபிள்யு. எனப்படும் உலக மல்யுத்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது,

latest tamil news

பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது எமாற்றம் அளிக்கிறது. போராட்டம் நடத்தி வரும் வீரர், வீராங்கனைகளை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அவமரியாதை செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும். போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம். இவ்வாறு உலக மல்யுத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.