சென்னை மக்களே உடனே இதை பண்ணுங்க.. இல்லாட்டி மொத்தமாக கட் பண்ணிடுவாங்க!

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சென்னையில் சில பகுதிகளில் நிலுவை தொகையை செலுத்ததாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மெட்ரோ குடிநீர் நிறுவனம், நிலுவை தொகை செலுத்தாமல் நீண்ட நாட்களாக பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அண்ணாநகரில் உள்ள கைலாஷ் காலனி, தியாகராய நகரில் உள்ள மோதிலால் தெரு மற்றும் பல … Read more

The World Wrestling Federation regrets the arrest of the players | வீரர்கள் கைது உலக மல்யுத்த கூட்டமைப்பு வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். போராட்டம் நடத்தும் வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம் என தெரிவித்துள்ளது. புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. … Read more

பாலகிருஷ்ணாவின் அடுத்த பட தலைப்பு இதோ

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தற்போது இவர் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தனது 108வது படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வருகின்ற தசராவிற்கு இந்த படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‛பகவந்த் கேசரி' டேக் … Read more

எல்லாமே அவர் காசு தானாம்.. அந்த தயாரிப்பு நிறுவனமாவது அவ்வளவு கொடுக்கிறதாவது.. வெறும் பில்டப்பா?

சென்னை: அந்த இசையமைப்பாளருக்கே சரியான சம்பளத்தை கொடுக்க முடியாமல் தவித்து வரும் அந்த தயாரிப்பு நிறுவனம் எப்படி அந்த மாஸ் நடிகருக்கு இத்தனை கோடி சம்பளம் கொடுக்கிறது என விசாரித்து பார்த்தால் வழக்கம் போல எல்லாமே அவருடைய காசு தான் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. உச்ச நடிகர் முதல் பல முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களை தாங்களே இன்னொருத்தர் பெயரில் தயாரிப்பது வழக்கமான ஒன்றாகவே மாறி விட்டது. இளம் ஹீரோக்களே அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனங்களை … Read more

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியாவிற்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாறா ஹல்டன் ஒபே நுவெரெலியாவிற்கான விஜயமொன்றை நேற்று (30) மேற்கொண்டிருந்தார். உயர் ஸ்தானிகர் சாறா ஹல்டன் ஒபே மற்றும் நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, நுவரெலிய மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றுலாத் துறை, விவசாய, கல்வி மற்றும் சமூகமயப்படுத்தல் போன்றன தொடர்பாக இச்சந்திப்பின் போது இருவரும் கலந்துரையாடினர். அத்துடன், மாவட்ட செயலாளர் நந்தன கலபட, உயர் ஸ்தானிகர் சாறா … Read more

மதுரை விவசாய குடும்பத்தில் பிறந்த "செல்வ பிரபு" இந்தியாவிற்காக நிகழ்த்திய சாதனை – டிடிவி தினகரன் வாழ்த்து!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில்,‌ மும்முறை நீளம் தாண்டுதலில்  ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த செல்வ பிரபு இந்தியாவிற்காக சாதனை படைத்திருப்பதை பெருமிதத்துடன் பாராட்டுகின்றேன்.  இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12 ஆம் … Read more

சேலம்: விளையாடச் சென்ற சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்! – முதல்வர் இரங்கல்!

சேலம், மேட்டூர் அருகே விருதாசம்பட்டி முனியப்பன் கோயில் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரின் மகன் பரணிதரன் கந்தன், ஊரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சுபாஷின் உறவினர் நங்கவள்ளி கரட்டுப்பட்டி சேர்ந்த தங்கராசு, இவரின் மகன் கிரித்தீஷ். கோணூர் சமத்துவபுரம் அருகே தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் நேற்று பரணிதரன் கிரித்தீஷ் வழக்கம்போல் விளையாட சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. … Read more

கிராண்ட் பிரிக்ஸ் சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்திய மதுரை இளைஞர் – டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: கிரீஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் நாட்டிற்காக தங்கம் வென்ற மதுரை இளைஞர் செல்வ பிரபுவுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் சர்வதேச போட்டியில்,‌ மும்முறை நீளம் தாண்டுதலில் ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த … Read more

சகாப்தம், வளர்ச்சி, சுற்றுச்சூழல், மனிதநேயம், சமூக நலன் ஆகியவற்றின் சங்கமம் மோடி: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

சகாப்தம், வளர்ச்சி, சுற்றுச்சூழல், மனிதநேயம், சமூக நலன் ஆகியவற்றின் சங்கமம் மோடி என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால செயல்பாடு தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரை. நரேந்திர மோடி அரசின் ஒன்பது ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த மாற்றத்திற்கு நான் சாட்சியாக இருந்தேன். முதலில் ஒரு சாதாரண குடிமகனாக, பின்னர் ஆளுநராக, பின்னர் … Read more