மதுபோதையில் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை திறந்துவிட்டு வீணடித்த பேரூராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்!
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை திறந்து விட்டு, மது போதையில் மின்மோட்டாரை நிறுத்தாமல் தண்ணீரை வீணடித்த பேரூராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 29-ஆம் தேதியன்று மண்டபம் தென்கடற்கரை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மைக்குண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் கீழே வழிந்தோடியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை நிறுத்த, … Read more