பார்மலின் ரசாயனம் கலந்து பதப்படுத்தப்பட்ட 130 கிலோ மீன்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்..!
சேலம் மாவட்டம், சூரமங்கலம் மீன் சந்தையில் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தண்ணீரில் ஃபார்மலின் மருந்தை கலந்து, அதில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கட்டிகளில் மீன்களை பதப்படுத்தியது உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது. சூரமங்கலம் மீன் சந்தையில் நீண்ட நாட்களாக பதப்படுத்தப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ரசாயனம் கலந்த ஐஸ்கட்டியில் பதப்படுத்தப்பட்ட சுமார் 130 கிலோ மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். Source link