Manobala: சிகரெட் பழக்கத்தை கைவிட்ட கதை ..ஓப்பனாக பேசிய மனோபாலா..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் மனோபாலா 200 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இன்றளவும் பிசியாக நடித்து வந்த மனோபாலா 24 படங்களை இயக்கியும் இருக்கின்றார். ரஜினி, விஜயகாந்த், மோகன் என மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தார் மனோபாலா. பின்பு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நட்புக்காக … Read more

ஜனாதிபதியின் இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம்! ஜெ. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றச்சாட்டு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த வருடம் ஜீலை 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

 பிரித்தானியாவில் மன்னர் முடிசூட்டு விழாவில் புதிய மன்னராக பதவியேற்கும், சார்லஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னர் முடிசூட்டு விழா பிரித்தானியாவின் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா வரும் மே 6ஆம் திகதி லண்டனில் நடைபெறுகிறது. சுமார் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த பிரித்தானிய மன்னர் பரம்பரையில் எலிசபெத் ராணி(73) உயிரிழந்த பின்பு அவரது புதல்வர் சார்லஸ் மன்னராக பதவியேற்கிறார். @natgeokids.com சார்லஸ் நவம்பர் 14ஆம் திகதி, 1948ஆம் ஆண்டில் பிறந்தவர். அவரது தாய் எலிசபெத் பதவியேற்ற போது … Read more

நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வரும் செய்திகள் தவறானவை – குடும்பத்தினர் விளக்கம்

ஹைதராபாத்: நடிகர் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் தவறானவை என்று அவரது சகோதரி விளக்கமளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானதாக சமூக வலைதளங்கள்/ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் … Read more

மணிப்பூர்:தமிழர்கள் வாழும் மோரேவில் பெரும் இன மோதல்-வீடுகள் தீக்கிரை- பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு!

India oi-Mathivanan Maran மோரே: மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதலில் பல வீடுகள் எரிந்து தீக்கிரையாகின. இதனால் பெரும் பதற்றம் நிலவுகிறது. மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தமிழர்களும் மோரேவில் வசித்து வருகின்றனர். மோரே நகரில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், சேவை நிறுவனங்களை தமிழர்கள் நடத்தி வருகின்றனர். ஏராளமான வர்த்தக நிறுவனங்களையும் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி … Read more

ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி தம்பதி உட்பட பலி 3| Ambulance crashes into a tree, killing 3 including a couple

திருவனந்தபுரம் :கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனைக்கு நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நோயாளியுடன் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி தம்பதி உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். திருச்சூர் அருகே மருதங்கோட்டையை சேர்ந்தவர் ஆபித். அவரது மனைவி ரஹ்மத். இவர்களது உறவினர் பெமினா என்பவருக்கு நேற்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆம்புலன்சில் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த சுகைப் ஆம்புலன்சை ஓட்டினார். குன்னங்குளம் பகுதியில் சென்ற போது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மரத்தில் … Read more

எல்லோராலும் நேசிக்கப்படும் ரஜினியை இழிவுபடுத்துவதா?: ரோஜாவுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் முன்னாள் முதல்வரும் ஆந்திர சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழா நடந்தது. இதில் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்குப் பார்வை காரணமாகவே ஐதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக. நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது” என்று கூறினார். ரஜினியின் இந்த … Read more

கிரெம்லின் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல உக்ரைன் சதியா?| Is Ukraines drone attack on Kremlin plot to kill Russian President Putin?

மாஸ்கோ, மே 4- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்வதற்காக கிரெம்லின் மாளிகை மீது உக்ரைன் ஏவிய இரண்டு, ‘ட்ரோன்’கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் துவங்கியதில் இருந்தே, ரஷ்யாவின் பல்வேறு கட்டடங்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் … Read more

Thangalaan on Oscar: ஆஸ்கர் விருதுக்கு செல்லவிருந்த விக்ரமின் தங்கலான்… கடைசில இப்படி ஆயிடுச்சே!

சென்னை: சீயான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வருகிறது. தங்கலான் திரைப்படத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பா ரஞ்சித் உட்பட படக்குழு முடிவு செய்திருந்ததாம். ஆனால், தற்போது அது முடியாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்கருக்கு செல்லும் தங்கலான்: பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய சீயான் விக்ரம், அடுத்து தங்கலான் ஷூட்டிங்கில் … Read more

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை மையம் தகவல்

புதுடெல்லி, வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் மே 7 ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மே 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் , பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : புயல்