தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, மயிலாடுதுறை, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய … Read more

\"புதினை கொல்ல சதி?\" தாழ்வாக பறந்து வந்த டிரோன்.. அடுத்த நொடி திடீரென பற்றி எரிந்த ரஷ்ய அதிபர் மாளிகை

International oi-Vigneshkumar மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் மாளிகையில் திடீரென டிரோன் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஓராண்டிற்கு மேலாகப் போரை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த பிப். மாதம் தொடங்கிய போர் ஓராண்டைக் கடந்தும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் முயன்ற போதிலும் எதுவும் பெரியளவில் பயன் தரவில்லை. ரஷ்ய அதிபர் … Read more

‛பிள்ளை நிலா' தந்து எல்லையில்லா மனங்களை வென்ற மனோபாலா

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று(மே 3) மறைந்தார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், ஓவியர் என பல்வேறு பரிமாணங்களில் பயணித்த அவரைப் பற்றிய வாழ்க்கை பயணித்தை பார்க்கலாம். தஞ்சை மாவட்டம், மருங்கூர் என்ற ஊரில் 1953ல் டிச., 8ல் பிறந்தார். இவரது நிஜப்பெயர் பாலசந்தர். ஓவியம் சார்ந்த படிப்பை முடித்த அவர் சிறந்த ஓவியர். இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்பட்டறையிலிருந்து … Read more

Sarathbabu: ரஜினியின் நண்பரும் நடிகருமான சரத்பாபு காலமானார்… திரையுலகில் அடுத்தடுத்து சோகம்!

ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சரத்பாபு. கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனில்லாம நடிகர் சரத்பாபு தற்போது உயிரிழந்தார், அவருக்கு வயது 71. காலையில் நடிகர் மனோபாலா உயிரிழந்த நிலையில், தற்போது சரத்பாபுவும் காலமானது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்பாபு மறைவு: தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சரத்பாபு. கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த … Read more

இலவசமாக வாழைப்பழம் கேட்ட இளைஞர்… தராததால் ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி வியாபாரியை தாக்கிய கொடூரம்

பயந்தர், மராட்டிய மாநிலம் பயந்தரில், வாழைப்பழங்களை இலவசமாக தர மறுத்ததால், மாற்றுத்திறனாளி பழ வியாபாரியை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பயந்தரில் உள்ள தாக்கூர் காலிக்கு வெளியே தள்ளுவண்டியில் வைத்து மாற்றுத்திறனாளி பழ வியாபாரி ஒருவர் வாழைப்பழங்களை விற்றுக் கொண்டிருந்தார், அப்போது இளைஞர் ஒருவர் நான்கு வாழைப்பழங்களை இலவசமாக தரும்படி அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வியாபாரி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த … Read more

மழை குறுக்கீடு: சென்னை-லக்னோ ஆட்டம் பாதிப்பு..!

லக்னோ, 16வது ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை நடைபெற்று வரும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டுவதில் மழை காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் மழை நின்ற பின்னர் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. லக்னோ அணியில் … Read more

மனித உடலில் இருந்து உயிர் பிரியும் போது மூளையில் ஏற்படும் மாற்றம்…! விஞ்ஞானிகள் அதிர்ச்சி…!

வாஷிங்டன்: நாம் உயிரிழக்கும் போது என்ன நடக்கும் என்பது பெரிய மர்மமாகவே இருந்து வருகிறது. உயிரிழந்த பிறகு என்ன ஆகும் என்பதற்கு ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அதைத் தவிர உயிரிழக்கும் சமயத்தில் நமக்கு என்ன நடக்கும், அப்போது நமது உடலிலும் மூளையில் என்ன நடக்கும் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இதைக் கண்டறிய நரம்பியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிர் பிரியும் நேரத்தில் இருந்தவர்களின் மூளையில் என்ன நடந்தது, அது எப்படி … Read more

Honda Elevate – ஜூன் 6.., ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகம்

வரும் ஜூன் 6 ஆம் தேதி புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் கிரெட்டா உள்ளிட்ட C-பிரிவு எஸ்யூவி கார்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்த உள்ளது. அறிமுகத்தை தொடர்ந்து விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். Honda Elevate SUV 4.2-4.3 மீட்டர் நீளத்துக்குள் வரவுள்ள எலிவேட் எஸ்யூவி மாடல் 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர், NA பெட்ரோல் என்ஜின் பவர் மற்றும் டார்க் … Read more

அலங்கார மீன் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிகளில் அலங்கார மீன் தொழில்துறை மற்றும் நீர்த் தாவர தொழில்துறை முதன்மையானதாக கருதப்படுவதோடு இந்தத் தொழில்துறையில் ஈடுபாடு காட்டுகின்ற பண்ணையாளர்களை அதிகரிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை தற்போது திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாதுக்க, ஹோமாகம பிரதேசங்களுக்கு கடந்த 30 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின்னர் பாதுக்க … Read more

தொடர் மழையால் உடைந்த பாலம்: வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை போராடி மீட்ட பொதுமக்கள்

தொடர் மழையால் உடைந்த பாலம்: வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை போராடி மீட்ட பொதுமக்கள் Source link