#BREAKING | உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன்பு தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற எட்டாம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக வலுப்பெறும் என்று இந்திய மாநில ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link

மனோபாலா மறைவுக்கு காரணம் இதுதான்!!

பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மறைவுக்கான காரணம் குறித்து அவரது மகன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ரஜினி நடித்த ஊர்க்காவலன், ஆகாய கங்கை உள்ளிட்ட 20 படங்களை இயக்கியுள்ளார். நடிகராக சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். உடல்நலக்குறைவால் … Read more

அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!!

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 04.05.2023 மற்றும் 05.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் … Read more

பார்மலின் ரசாயம் கலந்து பதப்படுத்தப்பட்ட 130 கிலோ மீன்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்..!

சேலம் மாவட்டம், சூரமங்கலம் மீன் சந்தையில் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தண்ணீரில் ஃபார்மலின் மருந்தை கலந்து, அதில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கட்டிகளில் மீன்களை பதப்படுத்தியது உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது. சூரமங்கலம் மீன் சந்தையில் நீண்ட நாட்களாக பதப்படுத்தப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ரசாயனம் கலந்த ஐஸ்கட்டியில் பதப்படுத்தப்பட்ட சுமார் 130 கிலோ மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். Source link

நெல்லை சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் குறுவட்டம், பாலாமடை கிராமத்திலிருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டை நோக்கி கடந்த 22-4-2023 அன்று வேனில் சென்றபோது தேனி மாவட்டம், போடிமெட்டு அருகே உள்ள தோன்றிமலை என்னுமிடத்தில் அவர்கள் சென்ற … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ பட சர்ச்சை – தமிழக அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வரும் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசுக்கு உளவுத் துறை ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட்டால், அது பரவலான போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று அரசுக்கு தமிழக உளவுத் துறை எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, … Read more

உலக வளர்ச்சியில் இந்தியா, சீனாவின் பங்கு 50% இருக்கும்: ஐஎம்எப் அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ‘பிராந்திய பொருளாதார கண்ணோட்டம்-ஆசியா மற்றும் பசிபிக்’ தொடர்பான ஐஎம்எப் அறிக்கை: 2022-ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 4.6% ஆக அதிகரிக்கும். இந்த வளர்ச்சி பெரும்பாலும், இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும். சர்வதேச வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு 70% ஆக இருக்கும். … Read more

Manobala: என் அன்பு நண்பர்.. மனோபாலாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.. விஜயகாந்த் உருக்கம்!

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருந்தவர் மனோபாலா. 69 வயதான மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை மனோபாலா திடீரென மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மனோபாலா ஆகாய கங்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். ரஜினி … Read more

இந்தியா: ‘நாம 161வது இடமாம்.. பாகிஸ்தான் நமக்கு முன்னாடி போய்டுச்சு’.. எதுல.?

உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா 161வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் இன்று பத்திரிக்கை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘‘உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுப்படி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை பார்க்கப்படுகிறது. … Read more