பன்முக திறமை, பக்காவான நடிப்பு.. நடிகர் மனோபாலா காலமானார்.. இறுதி சடங்கு எங்கே, எப்போது நடக்கிறது?

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு இன்று பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் மனோபாலா வெறும் நடிகர் மட்டுமில்லை. தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவர் மனோபாலா.. 69 வயதான மனோபாலா தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து வந்தார். ஒவ்வொரு மாதமும் வெளியாகும் படங்களில் ஒரு சில படங்களிலாவது இவர் நடித்திருப்பார் என்ற நிலை உருவாகியது. அந்தளவுக்குத் தமிழ் சினிமாவில் மிகவும் … Read more

'லியோ' முயற்சியை முறியடிக்க முடியாத 'விடாமுயற்சி'

சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள், அதிகப் பதிவுகள், யு டியூப் தளத்தில் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகள் ஆகியவை தான் ஒரு புதிய பட அறிவிப்புக்கு ஆரம்ப கட்ட சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில் விஜய், அஜித் ஆகியோரது படங்களைப் பற்றிய அறிவிப்புகள் வரும் போது அது பற்றிய தகவல்கள் சண்டைகள் மிகவும் 'உக்கிரமாக' இருக்கும். அஜித்தின் 62வது படமான 'விடாமுயற்சி' பற்றிய அறிவிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு மே 1ம் தேதி வெளியானது. டுவிட்டர் தளத்தில் … Read more

ஹிந்து கடவுள் அவமதிப்புக்கு ஸாரி சொன்னது உக்ரைன்| Ukraine apologizes for insulting Hindu god

கீவ்: ஹிந்துக் கடவுள் மகா காளியை அவமதிக்கும் வகையில் உக்ரைன் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இதற்கு உக்ரைன் அரசு ‘ஸாரி’ தெரிவித்து உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நடக்கிறது. இந்நிலையில் உக்ரைன் ராணுவ அமைச்சகம் அதன் சமூக வலைதளத்தில் எண்ணெய் கிடங்கு பற்றி எரிந்து புகை மேலே எழும்பும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதற்கு அருகிலேயே அந்த படத்தை வைத்து மகா … Read more

Manobala Ajith: அவரு எப்படி கஷ்டப்பட்டார்ன்னு தெரியுமா..? அஜித்தை நினைத்து உருகிய மனோபாலா!

சென்னை: இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பாதிப்பு காரணமாக தனது 69வது வயதில் மறைந்த மனோபாலாவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஜித் குறித்து மனோபாலா பேசிய வீடியோ ஒன்று டிவிட்டரில் வைரலாகி வருகிறது. அதில், அஜித் குறித்து மனோபாலா பேசியதை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர். அஜித்தை நினைத்து உருகிய மனோபாலா:40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. ஆனால், இன்றைய ரசிகர்களால் காமெடி நடிகராகவே அதிகம் அறியப்பட்டுள்ளார். … Read more

2023 ஹீரோ பேஸன் எக்ஸ் புரோ படங்கள் வெளியானது

விற்பனையில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் பேஸன் புரோ மற்றும் பேஸன் எக்ஸ்டெக் பைக்கின் வரிசையில் எக்ஸ் புரோ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. வர்த்தக விளம்பர படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ஹீரோ பேஸன் எக்ஸ்புரோ பைக்கின் படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. நாம் பிரத்தியேகமாக வெளியிட்டிருந்த பேஸன் பிளஸ் 100 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை அடுத்த பைக்கின் படம் வெளியாகியுள்ளது. 2023 Hero Passion XPro பிஎஸ்6 நடைமுறைக்கு வந்த பிறகு நீக்கப்பட்டிருந்த எக்ஸ்புரோ மீண்டும் … Read more

அடுத்த கட்ட ஐஎம்எப் பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களுக்கு முதல் சலுகை…

எதிர்வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் முதலில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென அரசாங்கம் கொள்கையாக தெரிவித்துள்ளது என்ற அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஒரு துறையைப் பற்றி மாத்திரம் சிந்திப்பதில்லை. எனவும், இந்த நேரத்தில் அனைத்து … Read more

2 மாவட்ட ரேஷன் கடைகளில் இன்று முதல் ராகி சப்ளை: இதர மாவட்டங்களில் எப்போது?

2 மாவட்ட ரேஷன் கடைகளில் இன்று முதல் ராகி சப்ளை: இதர மாவட்டங்களில் எப்போது? Source link

பட்டியலின சாதி சான்றிதழை ஆராய டிஎன்பிஎஸ்சி.,க்கு அதிகாரம் இல்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் வரம்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996-1997ம் ஆண்டு தமிழக அரசால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் குரூப்-4 தேர்வில் பங்கேற்றி இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக பணியாற்றி வந்த கணவரை இழந்த ஜெயமணி என்பவர் கிருத்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறி பட்டியலினத்தவர் சாதி சான்றிதழ் பெற்றிருந்தார். அவர் பணிநியமனம் செய்யப்படும் பொழுது கணவர் … Read more

நடிகரும் இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!

பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் மனோபாலா.இவர் ஆரம்பத்தில் ‘ஆகாய கங்கை, பிள்ளை நிலா, சிறைப்பறவை, ஊர்க்காவலன், மூடுமந்திரம், கருப்பு வெள்ளை, பாரம்பரியம்’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இயக்கியுள்ளார். அத்துடன் நடிகர் வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன் ,சத்யராஜ், கார்த்திக்கு உள்ளிட்ட … Read more

நடிகர் மனோபாலா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!! சமீபத்தில் என்னை பாராட்டியது நெஞ்சில் நிழலாடுகிறது..!

நடிகரும் இயக்குநருமான மனோ பாலா கல்லிரல் பிரச்னை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 15 நாட்களாக உடல் நலிவுற்று வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இந்நிலையில் நடிகர் மனோபாலா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலாஅவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும்அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர … Read more