“ `நான் முதலில் வீராங்கனை, பின்னர்தான் நிர்வாகி' என பி.டி.உஷா கூறினார்!" – மல்யுத்த வீரர் பேட்டி
பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மூன்றாவது முறையாக இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், ஒரு சிறுமி உட்பட மல்யுத்த வீராங்கனைகள் பலரிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, சக வீராங்கனைகள் குற்றம்சாட்டிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் ஆகியோர் போராட்டம் நடத்தினர். பின்னர் இதில் விளையாட்டுத்துறை அமைச்சகம் தலையிட்டு புகார்கள் குறித்து விசாரணை நடத்த, மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. பி.டி.உஷா விசாரணைக் குழுவும் தனது அறிக்கையை துறை … Read more