'குட்டி குந்தவை' யார் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் முன்னணி நடிகர்களே சில காட்சிகளில் வந்து சென்றதாக ஒரு குறை ரசிகர்களிடத்தில் இருக்கிறது. அதே சமயம் சில காட்சிகளில் வந்தாலும் யார் இவர்கள் என சிலர் வியக்க வைத்துள்ளார்கள். அந்த விதத்தில் இளம் குந்தவை ஆக நடித்தவரும், இளம் நந்தினி ஆக நடித்தவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள். இளம் நந்தினி ஆக நடித்தவர் யாரென்று ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். விக்ரம் நடித்த 'தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை … Read more

பாக்.,கில் கன மழைக்கு 14 பேர் பரிதாப பலி| 14 people died due to heavy rain in Pak

பாகிஸ்தானில் பெய்து வரும் கன மழைக்கு ஒன்பது சுற்றுலா பயணியர் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலம் சமவெளி பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அப்போது, அப்பகுதியில் சுற்றுலா பயணியர் சென்ற ஜீப் ஒன்று சறுக்கி அருகில் உள்ள ஆற்றில் மூழ்கியது. இதில் சென்ற ஒன்பது பயணியரும் பலியாகினர். மீட்பு படையினர் தீவிரமாக … Read more

Chiyaan Vikram: தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததாக தகவல்

சென்னை: பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷனுக்காக சியான் விக்ரம் சக நடிகர்களுடன் கடந்த 20 நாட்களாக நாடு முழுவதும் டூர் அடித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இன்று மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்து விட்டதாக … Read more

இந்திய விமானப்படை தளபதி இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்தியவிமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி, நேற்று (02) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார். அதன்படி, கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்கப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இந்திய விமானப்படைத் தளபதியை அன்புடன் வரவேற்று, … Read more

ஒருவர் வீட்டில் எவ்வளவு ரொக்கம் வைத்துக் கொள்ளலாம்; வருமான வரித்துறை அபராதம் எவ்வளவு?

ஒருவர் வீட்டில் எவ்வளவு ரொக்கம் வைத்துக் கொள்ளலாம்; வருமான வரித்துறை அபராதம் எவ்வளவு? Source link

திருவாரூர் அருகே பரிதாபம்.! தண்ணீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி.!

திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் தென்குவளைவெளி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது மகன் துருவன் (2). இந்நிலையில் குழந்தை துருவன் நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தவறி தண்ணீர் பிடித்து வைத்திருந்த பாத்திரத்திற்குள் விழுந்துள்ளான். இதையடுத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என்று கீதா துருவனை … Read more

சென்னையில் ஆருத்ரா போல் புது மோசடி அரங்கேற்றம்..!!

ஆருத்ரா, ஏ.ஆர்.டி. ஹிஹாவு நிறுவனங்களை தொடர்ந்து பிராவிடண்ட் டிரேடிங் கம்பெனியும் மோசடியில் ஈடுபட்டுள்ளது. சிவசக்திவேல் என்பவர் கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் வட்டி தருவதாக கூறி ரூ.2,000 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர். கடந்த 8 மாதங்களாக வட்டி மற்றும் அசலை திருப்பிக் கொடுக்காமல் துபாய்க்கு சிவசக்திவேல் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனையறிந்த … Read more

“அரசியல் அட்ரஸ் இல்லாத அண்ணாமலை; என் தகுதிக்கு அவரை பற்றி பேசக் கூடாது” – சாடிய டி.ஆர்.பாலு

தஞ்சாவூர் திமுக சார்பில், காவிரி டெல்டா பகுதியில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி, விவசாயிகளை காப்பாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் தி.மு.க பொருளாளரும், பாராளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் நடத்திய கூட்டம் சில வாரங்களுக்கு முன்பு நிலக்கரி ஏலம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு தஞ்சாவூரில் பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கு … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்புதல்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர்பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா, பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தமிழக பொருளாதாரத்தை வரும் 2030-ல் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வரும் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த … Read more

”எங்களுக்கு ஆதரவாக அமீர்கான் குரல் கொடுத்தால்..” – மனம் திறந்த மகாவீர் போகத்

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் கீதா, பபிதா போகத்தின் தந்தையும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் போகத் தங்கள் போராட்டத்திற்கு நடிகர் அமீர்கான் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு … Read more