நடிகராக மாறிய பாடகர் ஹரிஹரன்

இந்திய அளவில் பின்னணி பாடகர்களில் முதல் வரிசையில் இருப்பவர் ஹரிஹரன். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் ரசிகர்களை தனது குரலால் வசியம் செய்து கட்டிப்போட்டு வைத்துள்ள இவர் இன்னொரு பக்கம் ஆல்பம் பாடல்கள் மூலமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார். அதே சமயம் கடந்த 2005ல் குஷ்புவுடன் இணைந்து பவர் ஆப் உமன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஹரிஹரன். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் … Read more

Met Gala 2023 – மெட் காலா.. ப்ரியங்கா சோப்ராவின் வைர நெக்லஸ் எவ்வளவு தெரியுமா?

நியூயார்க்: Priyanka Chopra (ப்ரியங்கா சோப்ரா) நேற்று நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்வில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த வைர நெக்லஸின் விலையை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றனர். மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் வருடா வருடம் மே 1ஆம் தேதி மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். மாலை தொடங்கி நள்ளிரவுவரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் புதுமையான உடைகள் அணிந்தபடி … Read more

இன்றிலிருந்து வெசாக் வாரம்

அரச வெசாக் விழா மே மாதம் 04-05 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் தலைமையில் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் மாதம்பே கெபெல்லேவல ஸ்ரீ ரதனஷிலி பிரிவென விகாரையில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு இன்றிலிருந்து மே மாதம் 8ஆம் திகதி வரை வெசாக் வாரம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதாக பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்தார். இம்முறை வெசாக் விழா வழமை போன்று வெசாக் விழா பாரிய … Read more

ஆருத்ரா மோசடி.. பாஜக நிர்வாகி நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கு முடக்கம்..!!

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் தங்கத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் 2500 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக ஆருத்ரா நிறுவனத்தின் 13 முக்கிய நிர்வாகிகளை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழிக்கு தொடர்புள்ள சிலரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அவர் சில கோடி ரூபாய் பணம் … Read more

மறைந்த பீட்டர்பாலை நான் ஒருபோதும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை

இரண்டு முறை விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கொரோனா லாக்டவுனில் கிறிஸ்துவ முறைப்படி பீட்டர்பாலை எளிமையாக திருமணம் செய்துகொண்டார். அதன்பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் பீட்டர் பாலுக்கு இருந்த குடிப்பழக்கம்தான் என தகவல் வெளியானது. அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில், பீட்டர்பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பீட்டர்பாலின் மனைவிக்கு இரங்கல் கூட தெரிவிக்காத நடிகை வனிதா, இன்ஸ்டா பக்கத்தில் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மறைந்த பீட்டர்பாலை … Read more

இன்று முதல் கோவை – மும்பை இடையே விமான சேவை..!!

ஏர் இந்தியா நிறுவனம், கோவையிலிருந்து மும்பைக்கு புதிய விமானத்தை இன்று முதல் இயக்க உள்ளது. மும்பையில் காலை 6:30க்கு புறப்படும் இந்த விமானம், கோவைக்கு 8:20க்கு வரும். காலை 9:00 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, 10:50க்கு மும்பை சென்றடையும்…. மும்பையில் இருந்து ரியாத்துக்கு 12:35 மணி; லண்டனுக்கு மதியம் 2:15 மணி; அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு மதியம் 2:30 மணி; துபாய்க்கு மாலை 4:30 மணிக்கு ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், கோவையிலிருந்தே இந்த விமானங்களுக்கு … Read more

மாஞ்சோலை: `செருப்புகள் அணியாத கால்கள்!' விளையாட்டுப் போட்டிகளும்; நினைவுகளும்|1349/2 எனும் நான்-8

அனைத்து சுக சௌகரியங்களுடன் நகர்புற அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அன்றாட வேலையின் அழுத்தத்தைப்போக்க, பணியில் புத்துணர்வுடன் செயல்பட சுற்றுலா, பொழுதுபோக்கு என பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆண்டு முழுதும் கடினமான சூழல்களில், சலிப்பூட்டும் ஒரேமாதிரியான வேலைகளில் உழலும் தேயிலைக்காட்டுத் தொழிலாளர்களுக்கு அதுபோன்றதொரு மாற்று எவ்வளவு அவசியம்? நாலுமுக்கு மைதானம் தொழிலாளர்களுக்குத் தொடர் வேலைக்கிடையே பொழுதுபோக்கு/ விளையாட்டுகளுக்கான வழிவகைகளை எஸ்டேட் நிர்வாகம் செய்யவேண்டும் என தோட்டத்தொழிலாளர் சட்டம், 1951ல் சொல்லப்பட்ட போதிலும், எஸ்டேட்டில் ஓரளவுக்கேனும் நடைமுறைக்கு வர ஆண்டுகள் … Read more

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் மே 8-ம் தேதி உருவாகிறது: 2 நாட்களுக்கு மழை தொடரும்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் மே 8-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று … Read more