கரூரில் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவ – மாணவியர் 15 பேருக்கு வாந்தி, மயக்கம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட15 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி விடுமுறை காரணமாக ஒன்றாக கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட முடிவு செய்துள்ளனர். அரிசிக்கு பதில் நூடுல்ஸ் மூலம் உணவு தயாரிக்க முடிவு செய்த அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த பொருட்களைக் கொண்டு சமையல் செய்துள்ளனர். அப்போது, ஒரு மாணவனின் வீட்டில் இருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை  நல்லெண்ணெய் என்று நினைத்து எடுத்து வந்து … Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சென்னை: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது, உயர்கல்வித் தகுதிக்கு ஊக்கத்தொகை, பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை நீக்கிவிட்டு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை கொண்டுவருவது, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பதவி மீண்டும் ஏற்படுத்துவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி … Read more

பஜ்ரங் தள அமைப்பினரை சிறையில் அடைக்க முயற்சி: காங். மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம் போன்ற வெறுப்பை விதைக்கும் அமைப்புகளுக்கு தடை விதிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஹொசப்பேட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது: ஹொசப்பேட்டை கூட்டத்துக்கு வருவதற்கு முன்பு இங்குள்ள ஹனுமான் கோயிலுக்கு சென்று அவரது காலடியில் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்தேன். அப்போது, கர்நாடகாவின் கலாச்சாரம், கவுரவம் ஆகியவற்றை அழிக்க முயற்சிப்பவர்களை … Read more

‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தின் மூலம் சூடானில் இருந்து மீட்கப்பட்ட 231 பேர் அகமதாபாத் திரும்பினர்

ஜெட்டா: சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதில் பலர் கொல்லப்பட்டதால் அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் தாயகம் திரும்புகின்றனர். அங்கு தொடர்ந்து 3-வது வாரமாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்திய விமானப் படையின் சி-130 ரக விமானம், ஐஎன்எஸ் சுமேதா கப்பல் ஆகியவற்றின் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதில் … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் இருப்பிடத்தை கண்டறியும் ‘ஸ்டார் சென்ஸார்’ பரிசோதனை வெற்றி

புதுடெல்லி: செயற்கைக்கோள் இருப்பிடத்தைக் கண்டறியும் ஸ்டார் சென்ஸார் கருவியின் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய வான் இயற்பியல் மையத்தின் (ஐஐஏ) விஞ்ஞானிகள் குறைந்த செலவில் ஸ்டார் சென்ஸார் கருவியை உருவாக்கினார். ‘ஸ்டார் பெரி சென்ஸ்’ என பெயரிடப்பட்ட இது, இஸ்ரோ கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டில் பரிசோதனை முறையில் இணைத்து அனுப்பப்பட்டது. இது விண்வெளியில் செயற்கைக் கோள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாக தெரிவிக்கிறது. விண்ணில் உள்ள நட்சத்திரங்களை … Read more

சீரியல் நடிகையின் விவாகரத்து கொண்டாட்டம்: பிக்பாஸ் காஜல் பசுபதி வெளியிட்ட பரபரப்பு பதிவு.!

சோசியல் மீடியாவில் தற்போதைய டிரெண்டிங்கான டாபிக் சீரியல் நடிகையின் விவாகரத்து போட்டோ ஷுட் தான். இதுசரி என்று ஒரு பக்கமும், தவறென்று மற்றொரு பக்கமும் விவாதங்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் பிக்பாஸ் காஜல் பசுபதி இந்த டைவர்ஸ் போட்டோ ஷுட் குறித்து தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் பிரபல நடிகர், நடிகைகள் போல் பலரும் போட்டோ ஷுட் நடத்தும் கலாச்சாரம் பெருகி வருகிறது. … Read more

பெலாரஸில் உயிரிழந்த இலங்கை மருத்துவ மாணவனின் மரணத்தில் மர்மம் – விசாரணைகள் ஆரம்பம்

பெலாரஸில் பல்கலைகழகத்தில் இலங்கை மருத்துவ மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Grodno State Medical பல்கலைகழகத்தில் கல்வி கற்ற 24 வயதுடைய மருத்துவ மாணவரான திஷான் குலரத்ன என்ற மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்ற இந்த மாணவன் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து வைத்தியராக வேண்டும் என்ற நோக்கத்தில் பெலாரஸில் உள்ள Grodno பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார். இறக்கும் போது … Read more

என்ன மணிகண்டன் ஆரம்பிக்கலாமா..லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட குட்நைட் டிரைலர்

ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் குட் நைட் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த டிரைலர் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

சூடானில் கடும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவமும் ஏழு நாள் போர் நிறுத்தம்!

சூடானில் கடும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவமும் ஏழு நாள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளன. இருதரப்புக்கும் இடையே நீடித்து வரும் மோதல் காரணமாக இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் தென் சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இருதரப்பிலும் சமாதானப் பேச்சுகளுக்காக பிரதிநிதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும், அவர்கள் விரும்பும் இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை சூடானை விட்டு 73 ஆயிரம் பேர் வெளியேறி விட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஒருவார … Read more