என்எல்சி ஆலோசனைக் கூட்டம்! தலைமைச் செயலகத்தில் அதிரடியாக என்ட்ரி கொடுத்த அன்புமணி இராமதாஸ்! 

என்எல்சி விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சி.வி கணேசன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டார், விவசாய பிரதிநிதிகள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை பேச்சு வார்த்தை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் நெய்வேலி, புவனகிரி எம்எல்ஏக்கள் மற்றும் என்எல்சி அதிகாரிகள் பங்கேற்றனர். பாமகவுக்கு இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும் மக்களின் பிரதிநிதியாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், … Read more

மிஸ் கூவாகம் அழகிப் போட்டி- முதல் இரண்டு இடங்களை தட்டிச் சென்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள்

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் முதல் இரண்டு இடங்களை சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் தட்டிச் சென்றனர். தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்ற 15 அழகிகள் இதில் பங்கேற்றனர். நடை, உடை, பாவனை போன்றவற்றை சிறப்பாக வெளிப்படுத்திய சென்னைநிரஞ்சனா முதலிடத்தையும், நிஷா இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். சேலம் சாதனா மூன்றாம் இடத்துக்கு … Read more

புதுக்கோட்டை – வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு: தடுப்புக் கட்டையில் மோதி விஜயபாஸ்கரின் காளை காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் இன்று (மே 2) ஜல்லிக்கட்டில் வாடிவாசல் தடுப்புக் கட்டையின் மோதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை படுகாயம் அடைந்தது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டி பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டை இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, ஜல்லிக்கட்டில் அதீத … Read more

பிஹாரில் 1.23 கோடி 100 நாள் வேலை அட்டை ரத்து

பாட்னா: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கடந்த 2005-ல் அமலுக்கு வந்தது. கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்க இந்த திட்டம் வகை செய்கிறது. இந்த திட்டம் குறித்து பிஹார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் நேற்று கூறியதாவது: பிஹாரில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 3 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 626 அட்டைகள் … Read more

ரேஷன் கடைகளில் இது புதுசு… கேழ்வரகு டூ கருப்பு கவுனி அரசி வரை… தமிழக அரசு சூப்பர் ஏற்பாடு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு உணவுத்துறை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தை பொறுத்தவரை உணவு மற்றும் கூட்டுறவுத் துறை என்பது உயிர் நாடி போல. நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை கொள்முதல் செய்கிறோம். இதேபோல் மற்ற பொருட்களையும் கொள்முதல் செய்து 2.23 கோடி குடும்ப அட்டைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம். நெல் கொள்முதல்கடைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை 35,941 இருக்கின்றன. செப்டம்பர் 2022 முதல் தற்போது வரை … Read more

Nayanthara: மேக்கப்பே இல்ல… சிம்பிள் லுக்கில் மும்பை ஏர்போர்ட்டில் க்ளிக்கான நயன்தாரா!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நடிகை நயன்தாரா மும்பை விமான நிலையத்தில் மேக்கப் இல்லாமல் செல்லும் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நயன்தாராதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று … Read more

டெங்கு மற்றும் இரத்த பரிசோதனைகளில் மேற்கொள்ளப்பட்ட மோசடி அம்பலம்!

டெங்கு பரிசோதனை மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 நிறுவனங்களுக்கு நோயாளிகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட சோதனைகளுக்கு கட்டணம் வசூலித்ததற்காக 9.4 மில்லியன் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) மூத்த புலனாய்வு அதிகாரி ஏ.யு.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.  நீதிமன்ற உத்தரவு நுகேகொட, கல்கிசை, மாளிகாகந்த மற்றும் கொழும்பு கோட்டை … Read more

மலேசிய கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் தீப்பற்றி விபத்து.. 3 பணியாளர்கள் மாயம்..!

தெற்கு மலேசிய கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த பணியாளர்கள் 3 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபோன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ‘எம்.டி பாப்லோ’ என்ற எண்ணெய் கப்பல், 28 பணியாளர்களுடன் சீனாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திங்கட்கிழமை மாலை மலேசியாவின் Tanjung Sedili கடற்பகுதியில் சென்ற போது, கப்பலில் தீடிரென தீப்பற்றி கரும்புகை எழுந்தது. தகவலறிந்த மலேசிய கடலோர காவல்படையினர், ரோந்து படகில் சென்று 25 பணியாளர்களை … Read more

200 யூனிட் இலவச மின்சாரம்.. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை-காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

கர்நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பெங்களூருவில் வெளியிட்டார். அதில் மாதந்தோறும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் அரசு துறையில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. Source link

பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் தோட்டாக்களை வீசி எறிந்த நபர்: தீவிரமடையும் கண்காணிப்பு

பிரித்தானியாவின் பக்கிங்ஹாம் அரண்மனை மைதானத்தில் துப்பாக்கி குண்டுகளை வீசி எறிந்த மர்ம நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக பொறுப்பேற்று கொண்டார். அவரது முடிசூட்டு விழா வரும் மே 6ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் வைத்து நடைபெற உள்ளது. CHRIS JACKSON/GETTY மன்னருடைய இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் … Read more