மகாத்மா காந்தியின் பெயரனும், எழுத்தாளருமான அருண் காந்தி மறைவு: முதல்வர் இரங்கல்
சென்னை: மகாத்மா காந்தியின் பெயரனும், எழுத்தாளருமான அருண் காந்தியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் பெயரனும் எழுத்தாளருமான அருண் காந்தி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, அருண் காந்தி மகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை … Read more