தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏடிஜிபி அபய்குமார் சிங் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறை தலைமையக ஏடிஜிபி ஜி.வெங்கட்ராமன், சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபி பாலநாக தேவி, காவல் துறை தலைமையக நிர்வாகப் … Read more

ராகுல் காந்தி மேல்முறையீடு: இடைக்கால தடை விதிக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு; ஜூனில் இறுதி தீர்ப்பு

குஜராத்: ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் ஜூன் மாதம் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 2019-ல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?” என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் … Read more

உயிர்களுக்கு ஆபத்து; கைத்துப்பாக்கி வேண்டும்; விஏஓ சங்கத்தினர் கோரிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். நேர்மையான அதிகாரிகள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தேவைப்படும் பட்சத்தில், கைத்துப்பாக்கி வழங்கவும் பரீசிலனை செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அரசு அதிகாரியை அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை செய்யும் அளவுக்கு கொலைகார கும்பலுக்கு வந்த துணிவால் சாமானிய … Read more

இளையராஜாவின் அண்ணன் மகன் திடீர் மரணம்: சோகத்தில் திரையுலகினர்.!

தமிழ் சினிமா ரசிகர்களால் இசைஞானி என அன்போடு அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன். இவரும் திரையுலகில் பயணித்து வந்தார். இந்நிலையில் இவரின் மகன் பாவலர் சிவராமன் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இளையராஜாவின் மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நாடக எழுத்தாளர், இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இளையராஜாவின் ஆரம்பக்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 1973 … Read more

“அவர் ஒன்றும் என் கணவர் இல்லை..” பீட்டர் குறித்து காட்டமான பதிவை வெளியிட்ட வனிதா

வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இது குறித்து, வனிதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.   

Chatgpt: GPT4-ல் இருக்கும் வியத்தகு அம்சங்கள்: யூடியூபர்களுக்கு ஜாக்பாட்

ஜிபிடி4 அறிமுகம் மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டில் இயங்கி வரும் OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஒருபுறம் இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது என்றாலும், மறுபுறம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. ChatGPT-ன் செயல்திறனை மக்கள் இன்னும் முழுமையாக பயன்படுத்தாத நிலையில், அடுத்த பதிப்பான GPT-4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ உருவாக்கலாம்  இதற்கு முன்னர் இருந்த ChatGPT வெர்ஷனில், நாம் கேட்கும் கேள்விகளுக்கு … Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மத்தியப் பிரதேச பாஜக நிர்வாகி கைது

நவ்ரோஜாபாத்,  மத்தியப் பிரதேசம் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மத்தியப் பிரதேச பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் உமரியா மாவட்டத்தில் நவ்ரோஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சிறுமியின் தந்தை போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், அவரது மகளை பா.ஜ.க.வை சேர்ந்த ராகுல் சித்லானி  என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் எனத் தெரிவித்து உள்ளார்.  பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராகுல் சித்ரானியை கடந்த ஆண்டு நவம்பரில் … Read more

திவால் ஆனது கோ பர்ஸ்ட் விமான நிறுவனம்: சேவைகள் நிறுத்தம்| Bankruptcy Go First Airline: Stoppage of Services

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: முன்னணி விமான நிறுவனமான கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடியா குழுமத்துக்கு சொந்தமான கோ பர்ஸ்ட் விமானம் நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால், மே.3,4, மற்றும் 5 ஆகிய … Read more

இறுதிகட்டத்தில் ஜெகஜீவன்ராம் வாழ்க்கை சினிமா

அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை சினிமாவாவது அதிகரித்துள்ளது. ஓடிடி தளங்களில் இதுபோன்ற படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதும் அதற்கு காரணம். அரசியல் தலைவர்களில் ஏற்கெனவே காந்தி, நேரு, நரேந்திரமோடி, மன்மோகன்சிங், ஜெயலலிதா, என்.டி.ராமராவ். ஒய்.ராஜசேகரரெட்டி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. தற்போது இந்திராவின் வாழ்க்கையை கங்கனா ரணவத் தயாரித்து, இயக்கி நடித்து வருகிறார். இந்த வரிசையில் முன்னாள் துணை பிரதமரும், ராணுவ அமைச்சருமான பாபு ஜெகஜீவன் ராம் … Read more

Kayal: அச்சச்சோ.. ‘கயல்’ சைத்ரா ரெட்டியை சுட்டுட்டாங்களே.. BTS வீடியோவை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் லீடு ரோலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டியை துப்பாக்கியால் சுடும் BTS வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை சைத்ரா ரெட்டி. தனது அக்கா குழந்தையுடன் கொஞ்சும் போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் அவர், அடிக்கடி சீரியல் ஷூட்டிங் ரீல்களையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கயல் சீரியலில் துப்பாக்கிச்சூடு … Read more