தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு – ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி மாணவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத 2018-ல் ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவில் … Read more

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – இந்திய அணி முதலிடம்..!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.2020 ஆம் ஆண்டு மே முதல் நடந்த மே 2022 வரை போட்டிகளின் முடிவுகள் 50 சதவீதமும், நடப்பு சீசன் போட்டிகள் முழுமையாகவும் கணக்கில் கொள்ளப்படும். இதன் அடிப்படையில் வருடாந்திர தரவரிசையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும் , இங்கிலாந்து அணி 2வது இடத்தில உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் … Read more

காலிங் பெல் அடித்து பிராங் விளையாட்டு… 3 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

கலிபோர்னியா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் அனுராக் சந்திரா (வயது 42). இந்திய அமெரிக்கரான இவரது வீட்டு வாசலில் உள்ள காலிங் பெல்லை அடித்து பிராங் விளையாட்டில் சில சிறுவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இது அவருக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனை கேமிரா வைத்து அவர் கவனித்து வந்த நிலையில், சிறுவர்களின் தொல்லை அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிறுவர்களில் ஒருவர், தனது இடுப்பின் பின்பகுதியை அவரது முகத்தில் தேய்த்து விட்டு தப்பி … Read more

வெளிநாடுகளில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் – திமுத் கருணாரத்ன

அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய போதிலும், இலங்கை அணி பங்கேற்கும் வெளிநாட்டு; போட்டிகளில் வெற்றி பெறுவது ஒரு நாடு என்ற வகையில் மிகவும் முக்கியமானது என இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார். காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ‘அயர்லாந்துக்கு எதிரான போட்டி முழுவதும் நன்றாக இருந்தது. இந்த … Read more

அமைச்சர் பி.டி.ஆர்-க்கு ஸ்டாலின் ஆதரவு: ஆடியோ ரிலீஸ் மட்டமான அரசியல் என விமர்சனம்

அமைச்சர் பி.டி.ஆர்-க்கு ஸ்டாலின் ஆதரவு: ஆடியோ ரிலீஸ் மட்டமான அரசியல் என விமர்சனம் Source link

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது.!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2 முதியவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சேவா சங்கம் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 76). இவருக்கு திருமணமாகி 3 பெண்கள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் பிரின்டிங் பிரஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.  அதேபோல் சின்னாளப்பட்டி கவுண்டர் தெரு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 56). இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் … Read more

தமிழ்நாட்டை அதிர வைத்துள்ள மரணம்!!

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை தலைமை இடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் (ஐ.எஃப்.எஸ்) என்ற தனியார் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் ஒரு லட்சத்திற்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக அறிவித்தது. அதனை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை செலுத்தினர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தை நடத்தி வந்த அதிபர்கள் தலைமறைவானார்கள். … Read more

திருவண்ணாமலை: விபூதி கவரில் அன்னை தெரசா படம்; அர்ச்சகர்கள்மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால், கூட்டம் அதிகமிருந்தது. அப்போது, ஆடைத் தயாரிப்பு நிறுவனமான ‘மேத்யூ கார்மென்ட்ஸ்’ சார்பில் ‘விபூதி குங்கும’ பிரசாத பாக்கெட்டுகள் அர்ச்சகர்களிடம் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன. விபூதி பாக்கெட்டுகளின் முன்பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. பின்பக்கம், அன்னை தெரசா படமும், மேத்யூ கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் பெயரும், முகவரியும் அச்சிட்டிருந்தனர். இதனைக் கவனிக்காமல், அர்ச்சகர்களும் பக்தர்களிடம் வழங்கியிருக்கிறார்கள். அன்னை தெரசா படம் அச்சிட்டிருந்த … Read more

தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை எடுத்து குடித்ததாக 3வது மனைவியை அடித்தே கொன்ற கொடூர கணவன்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில், வீட்டில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை எடுத்து குடித்ததாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்கத் தொழிலாளியான டெபு ராய் தனது 3-வது மனைவி வசந்தி பகாடியா உடன் கட்டளைக்குளத்தில் தங்கி செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வந்தார். சம்பவத்தன்று டெபு ராய் வாங்கி வந்த மதுவை வசந்தி எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து, மனைவியை கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு டெபு ராய் தூங்கச்சென்றுள்ளார். காலையில், … Read more

தமிழகத்தில் நில மேம்பாட்டு வங்கியை செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் நில மேம்பாடு வங்கியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூலத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் விவசாயி கே.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், “விவசாயத்திற்காக நீண்ட தவணை கடன்கள் வழங்கும் சிறப்பு வங்கிகளாக நில மேம்பாட்டு வங்கிகள் முதன் முதலில் பஞ்சாப் மாநிலம் ஜாங் என்ற ஊரில் … Read more