பஜ்ரங் தளம் விவகாரம் | “முன்பு ராமர் பிரச்சினை; இப்போது ஹனுமன்…” – காங். மீது பிரதமர் மோடி விமர்சனம்
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெகுவாக விமர்சித்துள்ளார். “வாரன்டி இல்லாத பொருளுக்கு வழங்கப்படும் கேரன்டி போன்றது காங்கிரஸின் வாக்குறுதிகள்” என்று பிரதமர் மோடி சாடியுள்ளார். கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலத்தில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், ஹோஸ்பேட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சிக்கு முன்பு … Read more