ஊழல் தடுப்பு குறித்துப் பேசாத மோடி ; ராகுல் காந்தி கடும் தாக்கு

பெங்களூரு ஊழல் தடுப்பு குறித்து கர்நாடகாவில் மோடி ஏன் பேசுவதில்லை எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பி  உள்ளார். இந்த மாதம் 10 ஆம் தேதி அன்று 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இன்று ராகுல் காந்தி தீர்த்தஹல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசி உள்ளார். அப்போது ராகுல் காந்தி … Read more

ஸ்டாலின் பேச்சால் பிடிஆர் ஆடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா? இதுமட்டும் நடந்தால் மோசமாகிடும்!

Tamilnadu oi-Velmurugan P சென்னை: மட்டமான அரசியல் என்று முகத்தில் அடித்தார்போல் மு.க.ஸ்டாலின் கொடுத்த பதில் காரணமாக பிடிஆர் ஆடியோ லீக் சர்ச்சை முடிவுக்கு வந்தவிட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் பிடிஆர் பேசியதாக ஏதேனும் ஆடியோக்கள் வெளியானால் நிலைமை மோசமாகவிடும் என்று பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள். பாஜக அவ்வளவு எளிதாக இந்த விவகாரத்தை விட்டுவிடாது என்றும் கூறுகிறார்கள். ஆடியோ லீக் சர்ச்சையால் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பதவி பறிக்கப்படலாம் என்று வெளியான ஊகச் செய்திகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் … Read more

சூடானில் இந்திய விமானப்படை நடத்திய ‛சீக்ரெட் ஆப்ரேஷன் : இந்தியர்கள் மீட்கப்பட்ட சாகசம்| Secret Operation conducted by Indian Air Force in Sudan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சூடானில் உள்நாட்டு போர் நிகழ்ந்துவரும் சூழலில், சேதமடைந்த ஓடுபாதையில் வெளிச்சமே இல்லாமல் நள்ளிரவு நேரத்தில் 121 இந்தியர்களை இந்திய விமானப்படை ரகசியமாக மீட்டு வந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்தது. தலைநகர் கார்தூம் உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்தது. அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட … Read more

இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவன் மறைவு

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகனான பாவலர் சிவன் (60) உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் இன்று(மே 2) காலமானார். இந்தியாவே போற்றும் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது சகோதரர் பாவலர் வரதராஜன். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நாடக எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இளையராஜாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 1973ல் மறைந்தார். இவரது மகன்களில் ஒருவரான பாவலர் சிவன் (60) எனும் சிவா என்பவர் இளையராஜாவின் இசைக்குழுவில் பயணித்து வந்தார். ஓரிரு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். புதுச்சேரியில் … Read more

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு| Earthquake in Tajikistan: 5.1 on the Richter scale

டுஷான்பே: தஜிகிஸ்தானில் இன்று (மே 02) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. டுஷான்பே: தஜிகிஸ்தானில் இன்று (மே 02) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

AR Murugadoss: சிவகார்த்திகேயன் வர லேட்டாகும்.. அல்லு அர்ஜுனை ஓகே செய்த ஏ.ஆர். முருகதாஸ்!

சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு படம் இயக்கும் வாய்ப்புகளே கிடைக்காத நிலை உருவாகி விட்டது. அஜித், விஜய் என டாப் ஹீரோக்களை இயக்கி வந்த ஏ.ஆர். முருகதாஸுக்கா இந்த நிலைமை என ரசிகர்களே ஷாக் ஆகி உள்ளனர். சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஏ.ஆர். முருகதாஸ் என தகவல்கள் சமீபத்தில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டு வருவதாக ஹாட் அப்டேட்கள் … Read more

இந்தியாவில் உலகின் மிக உயரம் வாய்ந்த ரெயில்வே பாலம்: சி.என்.என். புகழாரம்

ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளை இணைப்பதற்காக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை 300 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. எனினும், அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுகின்றன. குளிர் காலத்தின் ஒரு பகுதியில் இந்த சாலை மூடப்படும். இந்நிலையில், காஷ்மீரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரெயில் இணைப்பை உருவாக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, ஜீனப் ஆற்றின் மேலே ரெயில்வே பாலம் கட்டுவது என முடிவானது. இதுபற்றி சி.என்.என். … Read more

விராட் கோலி – கம்பீர் மோதல் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல…! ஹர்பஜன் சிங் கருத்து

லக்னோ, நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ … Read more

காளி தேவியை அவமதிக்கும் வகையில் புகைப்படம் – உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது

கீவ், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் மிக முக்கிய துறைமுக நகரமான செவஸ்டோபோலில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கிடங்கு தீப்பிடித்து எரிந்து விண்ணை முட்டும் வகையில் கரும்புகை மேலெழுந்தது. இந்த தாக்குதலை உக்ரைன் படைகள் தான் நடத்தி இருக்கக் கூடும் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தாக்குதலால் புகை மேலெழும்பிய புகைப்படத்தை வைத்து ஒரு வரைபடத்தை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அந்த படத்தில், … Read more

ola electric – ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு 130 கோடி பணத்தை திரும்ப தருகின்றது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற FAME அரசு மானியம் வழங்கி வருகின்றது. இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் அரசுக்கு தவறான தகவலை வழங்கி மானியம் பெற்று சுமார் 10,000 கோடி வரை மோசடியில் ஈடுபடுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்பொழுது இந்த பிரச்சனையில் சிக்கியுள்ள ஓலா எலக்ட்ரிக், ஏதெர் எனெர்ஜி, டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் வீடா ஆகிய நிறுவனங்ளும் இணைந்துள்ளது. நான்கு நிறுவனங்களும் மானியங்களைப் பெறுவதற்காக அரசின் FAME திட்டத்தின் கீழ் 1.5 லட்ச ரூபாய்க்கு … Read more