#BREAKING : சரத் பவார் திடீர் ராஜினாமா..!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருக்கிறார். இனிமேல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும், கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.தான் எழுதிய ‘லோக் மாஜே சங்கதி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் இதனை அறிவித்தார். சரத் பவாரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து, அவரே தலைவராகத் தொடர வேண்டும் என தொண்டர்கள் முழக்கம் எழுப்பிவருகின்றனர். Source link

"பிடிஆர் ஆடியோ முதல் அதிமுக ஊழல் குறித்த சிஏஜி அறிக்கை வரை" – `உங்களில் ஒருவன்'-ல் ஸ்டாலின் பதில்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதில் வீடியோவை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று வெளியிட்ட வீடியோவில் முதல்வர் ஸ்டாலின், “நம்முடைய திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டு ஆக போகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில், மகளிருக்கு இலவசப் பேருந்து, பள்ளிக் குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டித் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் திறன் … Read more

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் மீது கார் மோதியதில் உயிரிழப்பு..!

புதுச்சேரியில், பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். கோட்டக்குப்பம் அடுத்த கூனிமேட்டைச்  சேர்ந்த ஜீனத் பேகம் மற்றும் மகன் அப்துல் ரசாத் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஈ.சி.ஆர் சாலையில் சின்னமுதலியார் சாவடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள்  முன்னால் சென்ற பைக் திடீரென பிரேக் போட்டதால்  தனது பைக்கை அப்துல் ரசாத் வேகமாக நிறுத்தினார்.  இதில் நிலைதடுமாறி பைக் விழுந்த நிலையில் மகனும், பின்னால் … Read more

ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கலை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தனது மனைவி தனலட்சுமி, மகன் டில்லிராஜா ஆகியோரது பெயரில் ஸ்ரீபெரும்புதூரில் 2 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பழைய கட்டிடம் இருந்த இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் இந்த … Read more

‘முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி’ – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; பாஜக தாக்கு

பெங்களூரு: பஜ்ரங் தள், பாப்புளர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தடை போன்ற காங்கிரஸ் வாக்குறுதிகள் முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி என்ற பாஜக தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடகா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்தகாக அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா கர்நாடகா வந்துள்ளார், அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. சித்தராமையா அரசு பிஎஃப்ஐ மீதுள்ள வழக்குகளை … Read more

மெட் காலா 2023 | பூனை, முத்துக்களில் ஆடை – கார்ல் லாகர்ஃபெல்ட்டை கவுரவித்த பிரபலங்கள்

நியூயார்க்: நியூயார்க்கின் ஆடம்பர விழாவாக கருதப்படும் மெட் காலா 2023 நிகழ்வு தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகளவில் உள்ள பிரபலங்கள் பலரும் வித்தியாசமான ஆடை அணிந்து நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர். ஃபேஷன் துறையில் ஐகானாக இருந்த கார்ல் லாகர்ஃபெல்ட் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்தவகையில் கார்ல் லாகர்ஃபெல்ட்டைப் பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டு பிரபலங்கள் முத்துகள் பதித்த ஆடைகள், கருப்பு- வெள்ளை ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். மேலும் கார்ல் லாகர்ஃபெல்ட்டின் பூனையான ‘Choupette ’ தோற்றத்தில் … Read more

பாஜகவுக்கு ஓட்டு போட்டால் 'சுட்டுக்கொல்வோம்'.. ஜெயிலு கிடையாது.. கர்நாடகா எம்எல்ஏ எச்சரிக்கை!

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது அதனை தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது இங்கு ஆட்சி செய்து வரும் தேசிய கட்சியான பாஜக இந்த முறையும் வெற்றி கனியை பறிக்க தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், தீவிர வலதுசாரி சிந்தனைகொண்ட பாஜக எம்எல்ஏ-க்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுபான்மையினரை நேரிடையாக எச்சரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நேற்று விஜயபுராவில் … Read more

திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்? பகீர் இமெயில்.. முழு மலையையும் சுற்றி வளைத்த போலீஸார்.. என்னாச்சு?

திருப்பதி: திருமலை திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மர்ம இமெயில் ஒன்று வந்த நிலையில், திருப்பதி கோயில் மற்றும் மலைப்பகுதி முழுவதையும் ஆந்திரா போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான், திருப்பதி கோயிலுக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, பிரசித்தி பெற்ற கோயில்களிலேயே திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு என்று தனி இடம் உண்டு. இந்தக் … Read more

Vadivelu: மாமன்னன் படத்தில் வடிவேலு கதாப்பாத்திரம் இவ்வளவு கொடூரமானதா? மாரி செல்வராஜ் கொடுத்த ஹின்ட்!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாதிய ஒடுக்குமுறைகளை பேசிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் பரமக்குடி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்….! இதனை தொடர்ந்து கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி … Read more

CBSE Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் தேர்வு முடிவுகள், எப்படி சரிபார்ப்பது?

CBSE 10th Exam Result 2023: கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.