Mann Ki Baat 100: ரேடியோ உரையால் பிரதமர் மோடி சாதிப்பதுதான் என்ன?!

பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் மன் கி பாத் உரையின் 100-வது நிகழ்ச்சியை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார். 2014-ம் ஆண்டு முதன் முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, `மன் கி பாத்’ (மனதின் குரல்) எனும்பெயரில் நாட்டு மக்களுடன் ரேடியோ மூலமாக உரையாற்றி வருகிறார். அதன் 100-வது உரை நிகழ்ச்சி ஏப்ரல் 30-ம் தேதி, ஐ.நா முதல் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் … Read more

அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அப்பதவியில் இருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கி உள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆக முடியும் என்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் … Read more

100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி

புதுடெல்லி: மனதின் குரல் 100-வது நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய தொழிலதிபர் பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு இந்தியாவினால் எளிதாக தீர்வு காண முடியும். பல நெருக்கடிகளை உலகம் எதிர்கொண்டாலும், அந்த நெருக்கடிகளுக்கு தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது’’ என்று புகழாரம் சூட்டினார். அண்மையில் டெல்லி வந்த பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை … Read more

‘ஆபரேஷன் காவேரி’ மூலம் சூடானில் இருந்து மேலும் 186 இந்தியர்கள் மீட்பு: இதுவரை 3,000 பேர் நாடு திரும்பினர்

ஜெட்டா: வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது. வாக்குறுதி அளித்தபடி குறிப்பிட்ட காலத்தில் ஆட்சி அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்காததால் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலேயே மோதல் தொடங்கியது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்திய விமானப் படையின் சி-130 விமானம், ஐஎன்எஸ் சுமேதா கப்பல் ஆகியவற்றின் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதில் சவுதி அரேபியாவும் … Read more

முதல்வருக்கு நன்றி… நிறுத்தி வெச்சீங்க.. வாபஸ் வாங்குனீங்க.. – திருமாவளவன்

எட்டு மணி வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி தமிழக அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த மசோதாவை மே தினமான இன்று முதல்வர் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார். இதற்கு திமுகவின் கூட்டணி கட்சி தலைவரான திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருமாவளவன் கூறியிருப்பது; உலகத் தொழிலாளர்கள் கொண்டாடும் உன்னதநாளான மே நாளில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த யாவருக்கும் விசிக சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொழிலாளர்களின் உரிமைகளை … Read more

கொழும்புக்கு வெளியே உள்ள நகரங்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை

கொழும்புக்கு வெளியே உள்ள நகரங்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  அனுராதபுரம் மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்துத் துறைக்கென புதிதாக 27 பேருந்து வண்டிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  இவற்றின் பெறுமதி 300 மில்லியன் ரூபாவைத் தாண்டுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.  போக்குவரத்து வசதி மக்களுக்கு உயர்தரத்திலான போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கோடு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். Source link

எனக்கு தோனி மிகவும் பிடிக்கும்.. ஆனால்..! அன்புமணி ராமதாஸ் சொன்ன விஷயம்!

திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசியுள்ளார்.   

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு..!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பை பேக் திட்டத்தின் கீழ் நியூயார்க் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். இதற்காக 500 டாலர்கள் கொண்ட பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கைத்துப்பாக்கியை ஒப்படைத்தால் முதல் ஆயுதத்திற்கு 500 டாலர்களும், அடுத்தடுத்த ஆயுதங்களுக்கு 150 அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. Source link

பகுஜன் சமாஜ் கட்சியின் மக்களவை உறுப்பினர் அஃப்ஸலுக்கு 4 ஆண்டுகள் சிறை..!

உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மக்களவை உறுப்பினர் அஃப்ஸல் அன்சாரியின் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அம்மாநிலத்தின் காஜிபூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த அஃப்ஸல் அன்சாரி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆட்கடத்தல், கொலை வழக்கில் அஃப்ஸலுக்கு 4 ஆண்டுகளும், அவரது சகோதரருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்  விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி அஃப்ஸல் அன்சாரி மக்களவை … Read more

"எஸ்.எஸ்.வாசன் சார் பேர்ல விருது வாங்கறது பெருமையா இருக்கு"- விகடன் மேடையில் நெகிழ்ந்த மணிரத்னம்

ஆனந்த விகடன் சினிமா விருதுகளின் முக்கிய விருதான எஸ்.எஸ்.வாசன் விருது இம்முறை இயக்குநர் மணிரத்தினத்திற்கு வழங்கப்பட்டது. கமல்ஹாசன் இந்த விருதை வழங்கினார். பாடலாசிரியர் விவேக் விருது விழாவில் இந்த குறிப்பிட்ட நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். கமல், மணிரத்னம், விவேக் முதலில் மேடையேறிய கமல் ‘உயிரே, உறவே, தமிழே… வணக்கம்’ என தனக்கேயான பாணியில் பேசத்தொடங்கினார். “எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து சினிமால இருக்கேன். அப்போதிலிருந்து எஸ்.எஸ் வாசன் சாரை பார்த்துட்டு இருக்கேன். அவர் வீட்டு வாசல்ல நின்னு … Read more