உழைப்பாளர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம்.. பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக சில இடங்களில் கூட்டங்கள் பாதியிலே நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் கம்மாளப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மாற்றி அமைக்கும் முடிவினை எதிர்த்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் நிறுத்தப்பட்டது. தருமபுரியில் பாலக்கோடு ஒன்றியம் எர்ரணஹள்ளி ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய கிராம மக்களிடம், ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படும் நிலையில் … Read more

எட்டுமணி நேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வருக்கு பாராட்டு: திருமாவளவன்

சென்னை: எட்டுமணி நேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வரின் நிலைபாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத் தொழிலாளர்கள் கொண்டாடும் உன்னதநாளான மே நாளில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த யாவருக்கும் விசிக சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தமது குருதியைக் கொட்டிய, இன்னுயிர் நீத்தப் போராளிகள் அனைவருக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். ‘எட்டுமணி நேர வேலை’ என்பது உழைப்போரின் … Read more

மாலத்தீவுக்கு இந்திய ரோந்து கப்பல் பரிசு: அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வழங்குகிறார்

இந்தியாவின் முக்கியமான அண்டை நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. அங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதல் 3 நாட்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சாலிஹ், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித், பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா தீதி ஆகியோரை ராஜ்நாத் நாத் சிங் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த பயணத்தின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விரைவு ரோந்து … Read more

12 மணி நேர மசோதா வாபஸ்; முதல்வருக்கு ஐ.என்.டி.யு.சி. நன்றி..!

12 மணி நேர வேலை மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற்றதற்கு தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செகரட்டரி ஜெனரல் முதன்மை பொதுச்செயலாளர் மு.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கடந்த 12-ம் தேதி “தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா 2023” தாக்கல் செய்து 21-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்கள் 12-மணி நேரம் பணி செய்வது என்பது ஏற்புடையது அல்ல. அந்த சட்டம் தொழிலாளர்களுக்கு விரோதமானது என்று தொழிற்சங்க … Read more

Vidaamuyrachi: விடாமுயற்சி ரிலீசுக்கு தேதி குறித்த அஜித்..ஒரு முடிவோடு தான் இருக்காரு போல..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இன்று அஜித் தன் 52 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் AK62 திரைப்படம் உருவாகப்போகின்றது என்ற தகவல் கடந்த ஜனவரி மாதமே கசிந்துவிட்டது. இருந்தாலும் படக்குழு இதனை அதிகாரபூர்வமாக … Read more

விராட் கோலி-கவுதம் கம்பீர் இடையே வெடித்த வாக்குவாதம்..!மைதானத்தில் ஏற்பட்ட உச்சக்கட்ட பரபரப்பு: வீடியோ

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன் உல்-ஹக்- விராட் கோலி வாக்குவாதம் ஐபிஎல்-லின் 43வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதின, இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 126 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. ஆனால் இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் … Read more

இந்தியாவில் 5 வருடங்களில் 19000 தாழ்த்தப்பட்ட உயர்கல்வி மாணவர்கள் கல்வி நிறுத்தம்

டில்லி கடந்த 2018-23 வரை ஐ ஐ எம், ஐ ஐ டி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இருந்து 19000 க்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதை நிறுத்தி உள்ளனர். நாட்டில் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகம் என உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இதற்காக நுழைவுத் தேர்வு, இட ஒதுக்கீடு என மாணவர்களுக்கு பல சலுகைகளும் தரப்படுகின்றன.   இங்குக் கல்வி பயில இடம் கிடைப்பது பல மாணவர்களுக்கு ஒரு … Read more

விஷ்ணு விஷாலுக்கு பதிலாக ஹிப் ஹாப் ஆதி

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‛இன்று நேற்று நாளை'. மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரவிக்குமார் இயக்கினார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் இந்த படத்தில் இப்போது … Read more

Vijay Sehtupathi – ஒன்று இல்லை இரண்டு இல்லை 250 வீடுகள் – விஜய் சேதுபதி செய்த செம உதவி

சென்னை: Vijay Sehtupathi (விஜய் சேதுபதி) நடிகர் விஜய் சேதுபதி பெப்சி யூனியன் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட பணம் கொடுத்த சம்பவத்தை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழின் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் விஜய் சேதுபதி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் சூப்பர் … Read more