ரூ.40 லட்சம் போதும் நிலத்தை எடுத்துக்கங்க! கடலூர் அருகே கிராம சபையில் நிறைவேறிய அதிர்ச்சி தீர்மானம்! 

என்எல்சி நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தினால் ஏக்கருக்கு 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று, கம்மாபுரம் அருகே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை உள்ளிட்ட ஆறு பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை மத்திய அரசின் மேற்கொண்டு வருகிறது. இதில் டெல்டா உள்ளிட்ட மூன்று பகுதிகளில் அண்மையில் ஏலம் விடப்பட்டதை எதிர்த்து பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.  … Read more

இந்த படத்திற்கான ஆதாரம் காட்டினால் ரூ.1 கோடி பரிசு!!

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று கேரள முஸ்லீம் யூத் லீக் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் … Read more

பிரபல சமையல் நிகழ்ச்சியின் நடுவர் மரணம்!!

‘மாஸ்டர் செஃப்’ எனும் உலகப் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியின் நடுவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மாஸ்டர் செஃப்’ எனும் சமையல் நிகழ்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில் ஒளிபரப்பாகிறது. அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளில் இந்த நிகழ்ச்சியை பிரபலமானதை அடுத்து தமிழிலும் அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் பிரம்மாண்டமான செட்களில் கைதேர்ந்த வல்லுநர்கள் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தெலுங்கில் … Read more

பாஜக Vs இந்து மக்கள் கட்சி… அடிதடி, சட்டைக்கிழிப்பு! – தாராபுரம் தகராறு… என்ன நடந்தது?

திருப்பூர் பா.ஜ.க-வின் தெற்கு மாவட்டத் தலைவராக இருப்பவர் தாராபுரத்தைச் சேர்ந்த மங்கலம் ரவி. அதேபோல, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர் ஈஸ்வரன். பிரதமரின் மனதின் குரல் நூறாவது வார நிகழ்ச்சி பா.ஜ.க பிரசாரப் பிரிவின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் குண்டடம் ருத்ரகுமார் தலைமையில் தாராபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அடிதடி இது தொடர்பாக, தாராபுரம் … Read more

தனியார் பள்ளியில் கழிவறை டேங்கை சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளர்கள் இருவர் மரணம்..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் இமானுவேல் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில், விடுமுறை தினத்தை முன்னிட்டு, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் இருவர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இருவரில் சுப்பராயலு என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், உடன் வந்த கோவிந்தன் என்பவரும் உள்ளே இறங்கியுள்ளார். அவரும் … Read more

நாளை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் – மதுரையில் பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸார்

மதுரை: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையொட்டி மதுரையில் 3,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் முத்திரை பதிக்கும் இவ்வாண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நளை காலை 9 மணிக்குள் நடக்கிறது. கோயிலுக்குள் மேற்காடி வீதியில் இதற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் ரூ.200, ரூ.500 அனுமதி பாஸ் பெற்றவர்கள், விஐபிகள் உட்பட 6 ஆயிரம் பேர், … Read more

தீவிரவாத குழுக்கள் பயன்படுத்திய 14 மொபைல் மெசெஞ்சர் செயலிகள் முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: தீவிரவாத குழுக்கள் பயன்படுத்திய 14 மொபைல் மெசேஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடன் உளவுத்துறை பரிமாரிக்கொண்ட ரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ஜம்மு காஷ்மீரில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தங்களுக்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ளவும், பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பெறவும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், பல்வேறு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு எதிரான தகவல்களைப் பரப்ப இந்த செயலிகளை பயன்படுத்துவதாக உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் … Read more

உதயநிதி ஸ்டாலின்: முதல்வருக்கு நன்றி.. வேதனை குரல்கள் கேட்கபடாதது ஏனோ.?

டெல்லியில் போராடிவரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகளை வழங்கினார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு வாரத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தரபிரதேச பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கணைகளை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்களை வாங்கி குவித்த பல வீரர்கள் மற்றும் … Read more

விவாகரத்து கிடைத்ததை வேறலெவலில் கொண்டாடிய நடிகை: தீயாய் பரவும் போட்டோஸ்.!

சமீப காலமாக போட்டோ ஷுட் கலாச்சாரம் டிரெண்ட் ஆகி வருகிறது. திருமணம், வளைகாப்பு, கல்யாணத்துக்கு முந்தைய போன்ற பல மகிழ்ச்சியான தருணங்களை போட்டோ ஷுட் மூலம் நியாபகங்களாக சேகரித்து கொள்ளும் வழக்கம் பெருகி வருகிறது. இந்நிலையில் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோஷுட் எடுத்து கொண்டாடியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் சின்னத்திரையில் ஜி தமிழில் ஒளிப்பரப்பான ‘முள்ளும் மலரும்’ என்ற … Read more