ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோவை பழிதீர்க்குமா பெங்களூரு..?

லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிராக 257 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஆனால் அதே போன்று லக்னோ ஆடுகளத்தில் ரன் எடுப்பது சிரமம். இங்கு நடந்த குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 136 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 128 ரன்னில் சரண் அடைந்ததே அதற்கு சான்று. ஆனாலும் உள்ளூர் … Read more

3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர் : பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு

கார்டூம், ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை ராணுவம் அறிவித்தது. இதனையடுத்து இந்த மோதல் உள்நாட்டு போராக உருவெடுத்தது. … Read more

12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: உழைப்பாளர் தினத்தில் ஸ்டாலின் அறிவிப்பு

12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: உழைப்பாளர் தினத்தில் ஸ்டாலின் அறிவிப்பு Source link

#மொடக்குறிச்சி:: மக்களை பாதிக்கும் தொழிற்சாலையை மூட வேண்டும்.. கிராம சபையில் முடிவு..!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பா பேட்டை ஊராட்சி வாவிக்காடு வலசு கிராமத்தில் எஸ்.பி.எம் வீலின் மில் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் பஞ்சு துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, தோல் நோய் போன்ற பிரச்சனைகளால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிறுவனத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களை கிராம மக்கள் … Read more

டெல்லி போராட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு!!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் … Read more

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி ரூ.1.87 லட்சம் கோடி வசூல்!

கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் இன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தபிறகு ரூ.1.87 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகி சாதனை படைத்திருக்கிறது.  GST கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ.1,67 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி வசூலானது. அதைவிட ரூ.19,945 கூடுதலாக தற்போது வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது! கடந்த ஏப்ரலில் சி.ஜி.எஸ்.டி-ஆக ரூ.38,440 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி-ஆக ரூ.47,412 கோடியும், … Read more

வரதட்சணை கொடுமை… கர்ப்பிணி தற்கொலை…. கொதித்தெழுந்த உறவினர்கள்… வீட்டின் முன் புதைக்கப்பட்ட சடலம்..!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது சடலத்தையும் அவர் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையின் சடலத்தையும் கணவன் வீட்டு முன்பே உறவினர்கள் பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள விலாப்பட்டி மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தனுக்கும் சவேரியார் பட்டினத்தைச் சேர்ந்த நாகேஸ்வரி என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. வரதட்சணையாக 15 சவரன் நகைகள் … Read more

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று(திங்கள்) திமுக … Read more

“கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் உங்களைப் பற்றியே ஏன் பேசுகிறீர்கள்?” – பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

துருவேகெரே (கர்நாடகா): கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் கர்நாடக மக்களின் எதிர்காலத்திற்கானது; நரேந்திர மோடிக்கானது அல்ல என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதனை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி, கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசினார். ராகுல் காந்தியின் உரை விவரம்: “கர்நாடகாவில் … Read more

வைகோ: ‘அரசியல்னா என்னன்னு தெரியுமா’.. திராவிட கட்சிகளுக்கு பாடம் எடுத்தவர்.!

திராவிட கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் குறித்து சொல்லிக் கொடுத்தவர் வைகோ என திருமுருகன் காந்தி கூறியுள்ளார். இது குறித்து மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி தனது பேஸ்புக் பதிவில், ‘‘வெற்றி தோல்வி மட்டுமே ஒரு இயக்கத்தின் வரலாற்று இருப்பை உறுதி செய்துவிடாது. அரசியல் போக்கில் தாக்கத்தை கொண்டுவருவதில் அதனுடைய பங்கை பொறுத்தும், எத்தகைய மாற்றத்திற்காக போராடுகிறது என்பதுவுமே அதன் முக்கியத்துவத்தை சொல்லும். மதிமுக என்பது உருவாகி கடந்த 30 ஆண்டுகளில் அது வலியுறுத்திய அரசியலே அதனை … Read more