''அண்ணாமலைக்கு கிரிமினல் மூளை! நேர்மையான அரசியல் செய்ய மாட்டார்''! இயக்குநர் அமீர் சாடல்!

Tamilnadu oi-Arsath Kan கரூர்: அண்ணாமலை எந்தக் காலத்திலும் நேர்மையான அரசியல் செய்யமாட்டார் என இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார். அண்ணாமலை பாஜகவில் இருக்கிறார் என்பதற்காக தாம் இப்படி கூறவில்லை என்றும் அவர் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியில் இருந்திருந்தாலும் அவரது செயல்பாடுகளை வைத்து தாம் இப்படித்தான் கூறியிருப்பேன் எனவும் விளக்கம் அளித்தார். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறியிருக்கிறார். அண்ணாமலை காவல்துறையில் பணியாற்றியிருப்பதால் நிறைய கிரிமினல்களை அவர் பார்த்திருக்கக் கூடும் … Read more

விஜய் 68 : உறுதி செய்த நடிகர் ஜீவா

விஜய்யின் 67வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படம் பரபரப்பாக உருவாகி வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக அடுத்து விஜய் நடிக்க உள்ள அவரது 68வது படம் பற்றிய தகவல்களும் வெளியாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய, பல நடிகர்களை வளர்த்துவிட்ட சூப்பர் குட் நிறுவனத் தயாரிப்பில்தான் விஜய் 68வது படம் உருவாகப் போவதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் சூப்பர் குட் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் மகனான நடிகர் … Read more

Surya :அடர்ந்த காடுகளில் நடக்கும் கங்குவா சூட்டிங்.. கொடைக்கானல் படப்பிடிப்பு எப்ப முடியுது தெரியுமா

சென்னை : நடிகர் சூர்யாவின் 42வது படமாக உருவாகி வருகிறது கங்குவா. வரலாற்றுப் பின்னணியுடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. சிவா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் இரு பாகங்களாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துவரும் சூர்யாவின், கங்குவா படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் கங்குவா சூட்டிங் : நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுத்து வருகின்றன. அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் … Read more

மும்பை அருகே கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு – மீட்புப்பணிகள் நிறைவு

மும்பை, மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டி வால்பாடா பகுதியில் வார்தமான் காம்பவுண்டில் உள்ள 3 மாடி குடோன் கட்டிடம் நேற்று முன்தினம் மதியம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நவீன உபகரணங்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் இடிபாடுகளில் சிக்கி உதவிகேட்டு சத்தம் … Read more

டிம் டேவிட் அதிரடி…! கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்கள்…! – ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை திரில் வெற்றி…!

மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னிலும், படிக்கல் 2 ரன்னிலும், ஹோல்டர் 11 … Read more

ஈகுவடார்: ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் – 10 பேர் பலி

கியுடா, ஈகுவடார் நாட்டில் போதைப்பொருள் கும்பல் அதிக அளவில் உள்ளது. இந்த கும்பல்கள் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய துறைமுக நகரான கவ்யாகியுல் நகரில் நேற்று இரவு ஆயுதமேந்திய கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் யார்? என்பது குறித்து … Read more

ரஜினிகாந்த் இவ்வளவு நாளாக வாங்கிய நல்ல பெயர் சரிந்து வருகிறது: புதுவையில் ரோஜா பேட்டி

ரஜினிகாந்த் இவ்வளவு நாளாக வாங்கிய நல்ல பெயர் சரிந்து வருகிறது: புதுவையில் ரோஜா பேட்டி Source link

டெல்லி | மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் – முதல்வர் ஸ்டாலின்!

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மல்யுத்த வீரர்கள் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள  போராடும் நிலைக்கு  தள்ளப்பட்டிருப்பதை காண நெஞ்சம் பதைப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலியல் புகார் தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக போராடி வரும் நிலையில், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் … Read more

அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி அறிவிப்பு!!

இந்த ஆண்டு கோடை காலத்திற்கான அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த முறை மார்ச் மாதத்திலேயே கோடை வெயிலின் தாக்கல் அதிகரித்துவிட்டது. அதனால் மக்கள் பெரும் கவலையில், அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்று புலம்பினர். இந்நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்துள்ளது. இதனால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மழை … Read more