"மாமன்னன்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'மாமன்னன்'.இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.“மாமன்னன்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் … Read more

Trisha :சமந்தாவிற்கு முன்னதாக கதீஜா கேரக்டரில் நடிக்கவிருந்த நடிகை.. வெளியான உண்மை!

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவரை காதலிக்கும் நாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருந்தனர். இதில் சமந்தா கதீஜா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நயன்தாராவை நடிப்பில் முந்தினார். அதிகமான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை வசீகரித்தார். கதீஜா கேரக்டரில் நடிக்க மறுத்த த்ரிஷா : விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் … Read more

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென்மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த … Read more

குப்பையில் கொட்டப்படும் காய்கறிகள் | வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் கோரும் டாக்டர் இராமதாஸ்!

தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால் அவற்றை உழவர்கள் சாலையோரங்களிலும், குப்பைமேடுகளிலும் கொட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்காத போது அவை குப்பையில் கொட்டப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், அச்சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படாதது வேதனை அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி தவிர்த்து மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும்  ஒரே காய்கறி தக்காளி … Read more

“அண்ணாமலைக்கு தமிழ் மீதும், தமிழர் மீதும் அக்கறை கிடையாது" – இயக்குநர் அமீர் காட்டம்

கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் ஃப்ரெண்ட்ஸ் பெடரேஷன் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில், பள்ளபட்டி நகரில் குற்றச் செயல்களை தடுக்கவும், கண்காணிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக, 100 சி.சி.டி.வி கேமராக்கள் அர்ப்பணிக்கும் நிகழ்வு, அங்குள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரவி, திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அமீர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குனர் அமீர், “நடந்து முடிந்த தமிழ் திரைப்பட … Read more

தாராபுரம் பேருந்து நிலையம் அருகே பாஜக – இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே மோதல்..!

தாராபுரம் பா.ஜ.க__இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே நடைபெற்ற மோதல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாராபுரம் பேருந்து நிலையம் அருகே திரண்ட இரு தரப்பினரும் அடிதடி மோதலில் ஈடுபட்டனர்.     Source link

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே 1 (இன்று) முதல் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களிலும், மே 4-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, மே 1-ம் … Read more

மஜத வேட்பாளரிடம் மனுவை திரும்ப பெற பேரம் பேசிய பாஜக அமைச்சர் சோமண்ணா மீது வழக்கு பதிவு செய்தது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: கர்நாடகாவில் மஜத வேட்பாளரிடம், வேட்பு மனுவை திரும்பப் பெறுமாறு பேரம் பேசிய பாஜக அமைச்சர் சோமண்ணா மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் சோமண்ணா வருணா மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய இரு தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதில், சாம்ராஜ்நகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் (மஜத) சார்பில் மல்லிகார்ஜுனசாமி (எ) ஆலூர் மல்லு போட்டியிடுகிறார். Source link