ராமேஸ்வரம் அஞ்சல்துறை மூலம் இணையத்தில் ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்துக்களின் புனித பூமிகளில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். இங்கு ஸ்ரீ ராமர் தனது பிரம்மஹத்தி தோஷம் போக பரிகாரமாகச் சிவனுக்குப் பூஜைகள் செய்துள்ளதாகப் புராணங்களில் சொல்லப்படுகின்றன. ராமரால் பூஜிக்கப்பட்ட சிவன் கோவில் ராமநாத சாமி கோவில் என அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இருந்து இங்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலின் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வாங்கப் பக்தர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன்ர். […]