பென்ஷன் பணத்திற்காக இறந்த தாயின் சடலத்துடன் 60 வயது முதியவர் ஆறு ஆண்டுகள் வசித்துவந்த சம்பவம் இத்தாலியில் நிகழ்ந்து உள்ளது.
வனெட்டோ பகுதியைச் சேர்ந்த ஹெல்கா மரியா ஹெகன்பார்த், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது 86 வயதில் மரணமடைந்து உள்ளார்.
ஹெல்காவுக்கு மாதந்தோறும் கிடைத்து வந்த பென்ஷன் பணத்தை இழந்து விடக் கூடாது என்று எண்ணி,பலேதிட்டம் போட்ட மகன் அவரது உடலை வீட்டிலேயே மறைத்துவைத்துள்ளார்.
இவ்வாறு 6ஆண்டுகள் ஆன நிலையில், சந்தேகத்தின்பேரில் ஹெல்காவின் குடியிருப்பிற்குள் அதிரடியாக நுழைந்து அதிகாரிகள் சோதனை நடத்திய போது தான் உண்மை அம்பலமாகி உள்ளது. ஆறு ஆண்டு காலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் பென்ஷன் தொகையை, அவரது மகன் எடுத்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.