கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த மே 26 ஆம் தேதி கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டபோது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வந்த கார் சேதப்படுத்தி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து அங்கு நிலவிய அசாதாரண நிலையை உணர்ந்து அதிகாரிகள் சோதனையை கைவிட்டு திரும்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2 நாட்களில் 3 திமுக கவுன்சிலர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய புகாரில் கைதான 19 திமுகவினருக்கும் ஜாமீன் கோரி கரூர் அகிலாநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.