கிராபிக் டிசைனர் உடன் தீனாவுக்கு இன்று திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியை தொலைபேசியில் கலாய்த்து புகழ் பெற்றவர் தீனா. பிறகு அந்த நிகழ்ச்சியில் நேரடியாக தோன்றி தனது மிமிக்ரி மற்றும் பாடி லாங்வேஜ் காமெடி மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய தீனா கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். தற்போதும் பல படங்களில் காமெடி மற்றும் ஹீரோவின் நண்பன் வேடங்களில் நடித்து வருகிறார்.
திருவாரூரை சேர்ந்த தீனா சமீபத்தில் தனது சொந்த ஊரில் வீடு ஒன்றை கட்டி கிரஹபிரவேசம் நடத்தினார். இப்போது திருமணத்திற்கும் தயாராகி விட்டார். தனது உறவுக்கார பெண்ணான கிராபிக் டிசைனரை இன்று திருமணம் செய்தார். இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். இந்த திருமணம் இன்று திருவாரூரில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த வாரம் சென்னையில் நடக்கிறது. தீனாவுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.