தமிழகத்தில் கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் சில பின்வருமாறு;
* ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டால், 7 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட போலீசார் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும்.
* கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
* ஆபாச காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது .
* ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பெண் கலைஞர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஆபாச ஆடையில் சித்தரிக்கக் கூடாது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார்.