கோவை: திருமணமான 20 நாள்களில் காதல் மனைவி கொலை – குடும்பத்துடன் நாடகமாடிய கணவன் கைது!

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகள் ரமணி (20). மத்வராயபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சஞ்சய் (20).  ரமணியும், சஞ்சயும் பேரூர் தமிழ் கல்லூரியில் பிகாம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு வந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ரமணி

இதனிடையே கடந்த மாதம் வீட்டை விட்டு சென்று வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து மத்துவராயபுரம் பகுதியில் உள்ள சஞ்சய் வீட்டில் அவரின் பெற்றோருடன் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ரமணி கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென மரணடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் தகவல் வெளியானது. திருமணமாகி 20 நாள்களே ஆன நிலையில் இந்த சம்பவம் நடந்ததால், இதுதொடர்பாக ரமணியின் தந்தை கருப்பசாமி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

சஞ்சய்

அதனடிப்படையில் போலீஸ் விசாரித்து வந்த நிலையில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் ஆன நிலையிலும் சஞ்சய், அவருடன் கல்லூரியில் படிக்கும்  மாணவி ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இது ரமணிக்கு பிடிக்கவில்லை.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. அப்படி ஏற்பட்ட வாக்குவாதத்தில் சஞ்சய், ரமணியை அடித்து கழுத்தைப் பிடித்து நசுக்கி கீழே தள்ளி துப்பட்டாவில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு அதை மறைப்பதற்காக தனது பெற்றோருக்கு போன் செய்துள்ளார். இருவரும்  வீட்டுக்கு வந்து ரமணியின் உடலில் அணிந்திருந்த உடையை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடியை கரைத்து,

லட்சுமணன்
அம்முகுட்டி

உடல்முழுவதும் பூசி குளிக்கவைத்து துணிகளை மாற்றிவிட்டு சாணிப்பவுடர் குடித்தது போல மற்றவர்களை நம்ப வைத்துள்ளனர்.  அக்கம்பக்கத்தினரை அழைத்து  புளியைக் கரைத்து ஊற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு ரமணி இறந்துவிட்டதாக கூறியவர்கள், இதுகுறித்து காருண்யாநகர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். போலீஸார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருமணமாகி சில நாள்களே ஆவதால், ஆர்.டி.ஓ விசாரணை முடித்து ரமணியின் உடல் தகனம் செய்யப்பட்டிருந்தது‌.

கைது

போலீஸ் விசாரணையில் சஞ்சய் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சஞ்சய், அவரின் பெற்றோர் லட்சுமணன், அம்முக்குட்டி ஆகியோரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.