கோவை : விளம்பரப் பலகை கட்டுமான பணியின்போது, கட்டுமானம் சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை கருமத்தம்பட்டியில் பலந்த காற்று உடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர்.
இத சம்பவம் குறித்து தகவலறிந்து வந்தா போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே வெளியான தகவலின்படி, விபத்தில் பலியான மூவரும் சேலத்தைச் சேர்ந்த விளம்பரப் பலகை அமைக்கும் தொழிலாளிகள் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி தெரிவிக்கையில், இந்த விளம்பர பலகை அமைக்கும் பணி உரிய அனுமதியுடன் நடைபெற்றதா? பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாத என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.