சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்து வரும் சமந்தா, அதைத் தொடர்ந்து சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இதை அடுத்து சென்னை ஸ்டோரி என்ற ஆங்கில படத்திலும் நடிக்கப் போகிறார் . இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தாவை 27 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். அதனால் அவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஏகப்பட்ட லைக்ஸ் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புல்வெளியில் தான் படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை தலைகீழாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் சமந்தா. ஹாலிவுட் நடிகைகள் ஸ்டைலில் அவர் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ஓரிரு மணி நேரங்களிலேயே 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன.