சங்கா ரெட்டி, தெலுங்கானா தைரிய்ம் இருந்தால் சீனா மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துங்கள் என பாஜகவுக்கு அசாதுதீன் ஓவைசி சவால் விடுத்துள்ளார். ஐதராபாத் பெருநகர மாநகராட்சிக்கான தேர்தல் சமயத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சை, “ஐதராபாத் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் ரோகிங்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வாக்காளர்களின் உதவியுடன் வெற்றி பெற முயல்கிறார்கள். எனவே ஐதராபாத் பெருநகர மாநகராட்சி தேர்தல் பாகிஸ்தான், […]