செல்பிக்கு தடை.. விதிகளை மீறும் வாகனங்கள் மீண்டும் வரமுடியாது… திருப்பதி மலைப்பாதையில் அதிரடி!

திருப்பதி – திருமலை மலைப்பாதையில் நடைபெறும் விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருப்பதி திருமலைதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருப்பதி மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
​ கேரளா டூர் போறீங்களா? எச்சரிக்கை… இதை பாருங்க!​திருப்பதி விபத்துஅரசுப் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இல்லாமல் கார்கள், டூரிஸ்ட் வாகனங்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருப்பதி மலைப்பாதையில் விபத்துக்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.​ தென்மேற்கு பருவமழை எப்போது? இந்திய வானிலை மையம் பரபரப்பு தகவல்!​
விபத்துக்களை தடுக்கதிருப்பதி மலைச் சாலையில் கடந்த மாதம் நிகழ்ந்த பல விபத்துகளில் 2 பெண்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் திருப்பதி திருமலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் திருப்பதி கூடுதல் எஸ்பி முனி ராமய்யா தலைமையில் திருமலை போக்குவரத்து போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
​ ஆட்டத்தை ஆரம்பிக்கும் தென்மேற்கு பருவமழை… அடுத்த வாரத்தில் 2 புயல்கள்!​விழிப்புணர்வு இல்லைஇதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் எஸ்பி முனி ராமய்யா மலைப்பாதையில் வாகனங்கள் ஓட்டுவது குறித்து ஓட்டுநர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததே விபத்துகள் ஏற்பட காரணம் என்றார். மேலும் செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, வளைவுகள் இருப்பது தெரியாமல் வேகமாக வாகனங்களை ஓட்டுவதும் விபத்துகள் நடைபெற காரணம் என்றும் அவர் கூறினார்.​ ஹய்யோ… ஹய்யோ… நான் சும்மா சொன்னேன்.. நம்பிட்டீங்களா? அந்தர் பல்டியடித்த சரத்குமார்!​
செல்பி எடுக்க தடைமேலும் மலைப்பாதையில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பி எடுப்பதாலும் விபத்துகள் நடைபெறுவதாக கூறிய கூடுதல் டிஎஸ்பி முனி ராமய்யா, இனி மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மலைச் சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படும் என்றும் விதிகளை மீறினால் அந்த வாகனங்கள் முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
முகத்தில் வாட்டர் ஸ்பிரேநீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் தங்களின் ஓட்டுநர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும் மலைப்பாதையில் வாகனங்கள் ஓட்ட தெரிந்த ஓட்டுநர்களே வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும அவர் கூறினார். மலைப்பாதையில் செல்வதற்கான வாகனங்கள் கட்டாயம் தகுதிச் சான்றிதழுடன் வர வேண்டும் என்றும் வாகனங்களில் உள்ள இருக்கைக்கு அதிகமாக பயணிகள் இருக்கக்கூடாது என்றும் கூடுதல் டிஎஸ்பி முனி ராமய்யா தெரிவித்துள்ளார். இதனிடையே திருப்பதி மலைப் பாதையில் நடைபெறும் விபத்துகளை தடுக்கும் வகையில் ஓட்டுநர்களின் முகத்தில் தண்ணீரும் அடிக்கப்பட்டு வருகிறது.
​ பிக்பாஸ் ரச்சிதாவா இது… ஜம்ப் சூட்.. கூலர்ஸ்… மாடர்ன் க்ளிக்ஸ்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.