ஜீரோ அறிவு பாஜக… அமித் ஷா 9 வருஷமா? 20,000+ புக் போதாது போலயே? டி.ஆர்.பி.ராஜா விட்ட பளார்!

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி கடந்த மே 25ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முதலமைச்சர்

கடிதம் எழுதியிருந்தார். இதில் ஆவின் நிறுவனம் தொடங்கப்பட்டது, தினசரி 35 லட்சம் லிட்டர் பால் 4.5 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து கொள்முதல் செய்வது, பால் உற்பத்தியாளர்கள் பெறும் நன்மைகள், நுகர்வோர் பெறக்கூடிய பயன்கள் உள்ளிட்டவற்றை விளக்கினார்.

ஊதா நிற பால் பாக்கெட் அறிமுகம் செய்த ஆவின்… என்ன விலை தெரியுமா?

அமுல் vs ஆவின் மோதல்

மேலும் அமுல் நிறுவனத்தின் செயலால் கூட்டுறவு சங்கங்கள் இடையே போட்டியை உருவாக்கிவிடும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் ஆவின் நிறுவன பால் உற்பத்தி பகுதிகளில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஸ்டாலின் எழுதிய கடிதம்

இந்த கடிதம் தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமுல் கைரா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் குஜராத்தில் இருக்கிறது. நம்ம தலைவர் நேரா அமித் ஷா ஜிக்கு கடிதம் எழுதுகிறார். அமித் ஷாவின் 9 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரு தவறான கடிதத்தை யாருமே எழுதியிருக்க மாட்டார்கள்.

அண்ணாமலை விமர்சனம்

நல்ல வேளை மோடிஜிக்கு எழுதவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக பாஜகவிற்கு 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தது போதவில்லை என நினைக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும்.

டி.ஆர்.பி.ராஜா பதிலடி

அதற்கு முன்பு மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. எனவே தான் அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக பாஜகவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.

அமித் ஷா 9 வருஷமாவா?

தங்கள் சொந்த அரசை பற்றியே தெரியவில்லை. உங்கள் தலைவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ? நீங்கள் அடிக்கும் ஜோக் உங்களுக்கு தான். 9 ஆண்டுகால வரலாறு என்று கூறினீர்களே? அமித் ஷா அமைச்சராக இருப்பதே கடந்த 4 ஆண்டுகளாக தான். இது கூடவா தெரியவில்லை.

அண்ணாமலைக்கு பின்னால் நின்று சிரிக்கும் நபர்கள் கொஞ்சம் விழித்து கொண்டால் நன்றாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.