சலாலா,
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென்கொரியாவுடன் மோதியது. இதில் எதிரணியின் கோல்கம்பத்தை அடிக்கடி முற்றுகையிட்டு மிரட்டிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர். இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கொரியா வீரர்கள் திகைத்து போனார்கள்.
முடிவில் இந்தியா 9-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. தாமி பாபி சிங் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்திய அணி இன்று அரங்கேறும் இறுதி சுற்றில் பாகிஸ்தான் அல்லது மலேசியாவை சந்திக்கும்.