தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் என சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி, கலை கலாச்சார செறிவும், பல சான்றோர்களையும் கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது எனத் தெரிவித்தார்.
முடிவுகள் எடுக்கும் போது, அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் பெறப்படும் எனவும், எவருக்கேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படும் எனவும் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தெரிவித்தார்.