தமிழில் வெளியாகும் 'டிரான்ஸ்பார்மர்ஸ்'
2007ம் ஆண்டு வெளியான 'ட்ரான்ஸ்பார்மர்ஸ்' படம் பெரிய வெற்றி பெற்றது. ராட்சத இயந்திரங்களின் மோதல்தான் இந்த படத்தின் கதை களம். இதன் வெற்றியை தொடர்ந்து 2009ம் ஆண்டு 'ட்ரான்ஸ்பார்மர்ஸ் : ரிவேன்ஜ் ஆப் தி பாலன், 2011ம் ஆண்டு 'ட்ரான்ஸ்பார்மர்ஸ் : டார்க் ஆப்தி மூன்', 2014ம் ஆண்டு 'ட்ரான்ஸ்பார்மர்ஸ் : ஏஜ் ஆப் எக்ஸ்டிக்சன், 2017ம் ஆண்டு 'ட்ரான்ஸ்பார்மர்ஸ்: தி லாஸ்ட் நைட்' படங்கள் வெளிவந்தன.
இந்த வரிசையில் தற்போது தயாராகி உள்ள படம் 'ட்ரான்ஸ்பார்மர்ஸ் : ரைஸ் தி பீஸ்ட்'. ஸ்டீபன் கேபிள் இயக்கி உள்ள இந்த படத்தில் ஆன்டனி ரோமாஸ், டொமினிக் பிஷ்பக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 200 மில்லியன் டாலர் செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. வருகிற 8ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இந்தியாவில் வயகாம்18 ஸ்டூடியோ நிறுவனம் வெளியிடுகிறது. ஆங்கிலம் தவிர்த்து இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. 3டி 4டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் பார்க்கலாம்.