திருப்பதி மலை பாதையில் நடைபெறும் விபத்துகளை தடுக்க திருமலை போலீசார் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் பலர் காயமடைந்து ஊர் திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே மலை பாதையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து வாகன ஓட்டிகளின் முகங்களில் தண்ணீர் தெளித்து மலைப்பாதையில் அனுப்பி வைக்கின்றனர்.
இதற்காக திருப்பதி மலையில் உள்ள ஜி என் சி டோல்கேட்டில் வாகன ஓட்டிகளின் முகத்தில் தண்ணீர் தெளிக்க தேவையான ஸ்பிரேயுடன் காத்திருக்கும் போலீசார், வாகனங்களை நிறுத்தி திருப்பதி மலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு முகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து புத்துணர்வு பெற செய்து வழிய அனுப்பி வைக்கின்றனர்.