சென்னை கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முதன்முறையாகப் பெங்களூருவில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கு விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்று […]