மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் வறண்ட பாலைவனமாவதை தடுக்க அ.தி.மு.க. அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கும் என அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்தபோது, தமது அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தியும் அணை கட்டுவதை தடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பன்மாநில நதிநீர் தாவாச் சட்டத்தில், நதிநீரை தடுப்பதற்கோ, திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என குறிப்பிடப்பட்டு இருப்பதையும் எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.