மொட்டை மாடியில்.. அந்த காட்சி.. இவரெல்லாம் ஒரு மனிதரா.. வெளியான வீடியோ.. கதறிய உயிர்கள்.. ஐயோ 25 முறை

காந்திநகர்: 16 வயது சிறுமி 20 முறை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியே தணியாத சூழலில், தற்போது அதைவிட கொடூர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் 40 முறை கத்தியால் கொடூரமாக குத்தி கொன்றார்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னமும் அடங்கவில்லை.

அதற்குள் இன்னொரு கொடுமை, குஜராத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பதற செய்து வருகிறது.

கொடூர அப்பா: குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வருபவர் ராமானுஜ் சாஹூ.. 45 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ரேகா.. மனைவியும், மகன்களும் இருக்கிறார்கள்.. அதேபோல சாந்தா என்ற 19 வயது மகளும் இருக்கிறார்.

இப்போது வெயில் காலம் என்பதால், தினமும் மொட்டை மாடியில் இவர்கள் படுத்து தூங்குவது வழக்கம்.. அப்படித்தான், கடந்த 18ம் தேதி இரவும், மொட்டை மாடியில் படுத்து தூங்க அனைவரும் சென்றிருக்கிறார்கள்..

அப்போது, அங்கே தூங்குவதில், ராமானுஜுக்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்பா – மகள் பிரச்சனையில், மனைவியும் மற்ற மகன்களும் தலையிட்டுள்ளார்கள்.. மகளுக்கே அவர்கள் சப்போர்ட்டும் செய்ததாக தெரிகிறது.. இதனால் ஆத்திரமடைந்த ராமானுஜ் ஆத்திரமடைந்தார்.. வேகவேகமாக, மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கிவந்து, கிச்சனில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு வந்து, மகளை சரமாரியாக குத்தி தாக்க தொடங்கினார்.
பதறிய மனைவி: இதைப்பார்த்து பதறிப்போன மனைவி, கணவரை தடுக்க முயன்றார்.. தனக்காக பேசாமல், மகளுக்காக பரிந்து பேசிய மனைவி மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த கணவன், இப்போது தன்னை தடுக்க முயன்றதால் மேலும் ஆத்திரமடைந்தார்.. உடனே மனைவி ரேகாவையும் சரமாரியாக குத்தியுள்ளார்… மொத்தம் 10 முறை மனைவி ரேகாவை குத்தியுள்ளார்… இதில், மனைவி கை விரல்களை துண்டு துண்டாக சிதறி போய் விழுந்தன..

குழந்தைகள் கண்முன்னேயே இவ்வளவும் நடந்தது.. இதற்கு மேல் பொறுக்க முடியாமல், 2 குழந்தைகளும் ராமானுஜாவை தடுக்க முயன்றனர். அப்போது அவரது மகனை கீழே தள்ளிவிட்டதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரது 17 வயது மகளும் அப்பாவை தடுக்க முயன்றார். உடனே, மகளை வீட்டிற்கு வெளியில் இருந்து உள்ளே தரதரவென இழுத்து சென்று, சுமார் 25 முறை கத்தியாலேயே ஈவிரக்காமல் குத்தி உள்ளார்.

நைட் நேரத்தில் மொத்த குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. எல்லாருமே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து, கதறினார்கள்..

வீடியோ: உடனடியாக போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமனுஜாவை கைது செய்தனர். இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி காண்போரை கலங்கடித்து வருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.